50 பேரை ஏமாற்றி திருமணம்.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. தாராபுரத்தில் இளம்பெண் சிக்கியது எப்படி? - Tamil News | | TV9 Tamil

50 பேரை ஏமாற்றி திருமணம்.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. தாராபுரத்தில் இளம்பெண் சிக்கியது எப்படி?

தமிழ்ச்செல்வி தலைமையில் மகேஷ் அரவிந்துக்கும், சந்தியாவுக்கும் கடந்த ஜூன் மாதம், பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை மகேஷ் அரவிந்தின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டதுடன், 12 பவுன் நகையையும் சந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். 3 மாதங்கள் கடந்த பின் சந்தியாவின் நடவடிக்கையில் மகேஷ் அரவிந்துக்கு சந்தேகம் வரவே அவரது ஆதார் அட்டையை பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

50 பேரை ஏமாற்றி திருமணம்.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. தாராபுரத்தில் இளம்பெண் சிக்கியது எப்படி?

கைது செய்யப்பட்ட சந்தியா

Updated On: 

10 Jul 2024 11:39 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். இவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்துக்கு பெண் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா (30) என்பவர் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமாகி உள்ளார். செயலியைத் தொடர்ந்து வாட்ஸ் ஆஃப் மூலமும் இருவரும் பேசி வந்துள்ளனர். அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்ததுடன் தமிழ்ச்செல்வியையும் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். இருவரும் பழகி வந்த நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மகேஷ் அரவிந்தை சந்தியா வற்புறுத்தி உள்ளார்.

இதையடுத்து, தமிழ்ச்செல்வி தலைமையில் மகேஷ் அரவிந்துக்கும், சந்தியாவுக்கும் கடந்த ஜூன் மாதம், பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை மகேஷ் அரவிந்தின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டதுடன், 12 பவுன் நகையையும் சந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். 3 மாதங்கள் கடந்த பின் சந்தியாவின் நடவடிக்கையில் மகேஷ் அரவிந்துக்கு சந்தேகம் வரவே அவரது ஆதார் அட்டையை பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. களம் யாருக்கு சாதகம்? விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு..

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் அரவிந்த் சந்தியாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றி கோபமடைந்த சந்தியா, மகேஷ் அரவிந்தையும் அவரது குடும்பத்தையும் மிரட்டி உள்ளார். இதனால், உஷாரான மகேஷ் அரவிந்த் சந்தியாவிடம் சமாதானம் செய்வதுபோல் பேசி தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சந்தியா அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் முடிந்ததும் அதன் மூலம் ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. திருமணம் ஆகாத 40 வயதைக் கடந்த ஆண்களைக் குறிவைத்து சந்தியா மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர், மதுரையில் ஒரு காவலர், கொடுமுடியில் ஒரு இளைஞர் என 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

அவர்களுடன் மனைவிபோல் சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டு நகை மற்றும் பணத்துடன் சந்தியா தலைமறைவாகிவிடுவார். இதுபோன்று பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்துள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வி உடைந்தாயாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சந்தியாவை பிடித்த தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணைக்குப் பிறகு சந்தியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read:  ஹாப்பி நியூஸ் மக்களே தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா?

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!