TN Deputy CM : உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது ஏன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
CM MK Stalin | துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமித்தது, செந்தில் பாலாஜியை மீண்டும் மின்சார துறை அமைச்சராக நியமித்தது மற்றும் அமைச்சரவையில் மாற்றம் செய்தது ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ள நிலையில், அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த திடீர் மாற்றம் அரசியல் கலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலி விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : TN Cabinet Reshuffle : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோவி செழியன் வரை.. யார் யாருக்கு என்ன துறை!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த மூன்றாண்டு கால வளர்ச்சிக்கு தமிழக அமைச்சர்கள் பெருமக்கள் அனைவரும் பங்களித்து இருக்கிறார்கள். இதன் இன்னொரு கட்டமாகவே தமிழக அரசின் துணை முதல்வராக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். எனக்கு துணையாக அல்ல இந்த நாட்டு மக்களுக்கு துணையாக அவர் இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டு துறையின் மூலமாக இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. விளையாட்டு துறை மிக குறுகிய காலத்தில் வீறுகொண்டு கொண்டு எழுந்துள்ளது. நாள்தோறும் விளையாட்டு வீரர்கள் பெற்று வரும் பரிசுகள் ஒலிம்பிக்கை நோக்கி நம் மாநிலத்தின் பயணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : October Changes : கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. அக்டோபர் மாதம் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!
அதேபோல், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். அதன் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் கண்காணித்ததன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றி காட்டி வருகிறார். அமைச்சர் உதயநிதி திமுக இளைஞரணி செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிட கொள்கை கொண்டவராக கூர் தீட்டி வருகிறார். அவரது செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சி திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே துணை முதல்வர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னிலும் கூடுதலாக உழைப்பை அவர் செலுத்திட வேண்டும்.
இதையும் படிங்க : விடுப்பு தர மறுத்த மேனேஜர்.. அடுத்த 20 நிமிடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்.. அதிர்ச்சி சம்பவம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களின் உள்ள கிடக்குகளையும், உணர்வையும் புரிந்துகொண்டு அனைத்து தரப்பு தமிழ் பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து அவர் மன நிறைவு அடையும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று விழைகிறேன். செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தியாகத்தை நான் வாழ்த்தியதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து திமுகவுக்கு எதிரான சதிச் செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறாஇயை ஏற்றததுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்கு களங்கும் வரக்கூடாது என்று நினைப்பவர்களால் தான் இந்த இயக்கம் இயங்குகிறது.
இதையும் படிங்க : Viral Video : உண்டியல் பணத்தை திருடும் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இளைஞர் காலம் தொட்டு என்னோடு களப்பணி ஆட்சிகாரர்கள் தான் சேலம் ராஜேந்திரனும், ஆவடி நாசரும், மாணவப் பெருவம் முதலே திராவிடக் கொள்கையில் ஊறி அடிமட்ட தொண்டராக கட்சிக்கு உழைத்த கோவி செழியனும் அமைச்சர் பொறுப்பேற்கிறார்கள். புதிய அமைச்சர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது கடந்து கால உழைப்பையும் நிகழ்கால திறனையும் மனதில் வைத்து பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். தங்களுக்கு வழங்கப்பட்ட துறையை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் கவனித்து அத்துரையின் மூலமாக மாநிலத்தை வளப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.