5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Srivilliputhur Andal: “கோவிந்தா.. கோபாலா” – வெகுவிமரிசையாக நடந்த ஆண்டாள் கோயில் தேரோட்டம்!

srivilliputhur: கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது, 5 ஆம் திருநாளான கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஐந்து கருட சேவையும், 7ஆம் திருநாளான கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.

Srivilliputhur Andal: “கோவிந்தா.. கோபாலா” – வெகுவிமரிசையாக நடந்த ஆண்டாள் கோயில் தேரோட்டம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Aug 2024 11:41 AM

ஆண்டாள் கோயில்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோயில் கொண்டுள்ள நாச்சியார் (ஆண்டாள்) அம்மனின் ஆடிப்பூர திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் 108 திவ்யதேச கோயில்களில் 99வது கோயிலாகும். இந்த விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் என புராணங்கள் தெரிவிக்கின்றது. அந்த வகையில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திர திருவிழாவில் பெரியாழ்வார் அவதரித்த தினத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெறும். இதேபோல் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்த நாளை முன்னிட்டு ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடக்கும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேரோட்டம் நிகழ்வு இன்று விமரிசையாக நடைபெற்றது.

Also Read: Naga Panchami: நாக பஞ்சமி எப்போது? – 5 ராசிக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்!

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது, 5 ஆம் திருநாளான கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஐந்து கருட சேவையும், 7ஆம் திருநாளான கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. இந்த நிலையில் 9 ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருத்தேரோட்டத்தை ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இந்த விழாவை காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகை தந்தனர்.

ஆண்டாள் கோயில் தேரோட்டத்தின் போது ஆண்டாளுக்கு வழக்கமாக சாற்றுவதற்காக திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் கோயில் சுந்தரராஜபெருமாள் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம், பூமாலை மற்றும் மங்கல பொருட்கள் ஆகியவை கொண்டு வரப்படும். அந்த வகையில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் அனைத்து நேற்று ஶ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது. நேற்றிரவு நடந்த வீதியுலா நிகழ்ச்சியில் ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரங்கமன்னர் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளினார்.

Also Read: Yogi Babu: வெளியுலக நபர்களால் டார்ச்சர்.. நொந்துபோன யோகிபாபு – நடந்தது என்ன?

இன்று காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலி வைபவம் நடந்தது. ஆண்டாள் ரெங்கமன்னருக்கு கண்ணாடி மாளிகையில் திருமஞ்சனம் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ண்நு வெண் பட்டுடுத்தி ரங்கமன்னரும், மஞ்சள் பட்டுடுத்தி ஆண்டாளும் தேரில் எழுந்தருளினர். காலை சரியாக 9.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேருக்கு பின்னால் இரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன் நின்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Latest News