Namakkal Crime News : ஒரே குடும்பத்தை 3 பேர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி காரணம்!

நாமக்கல் மாவட்டத்தில் திருமணமான 8 மாதங்களில் புதுமாப்பிளையும், அவரது பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த புதுமாப்பிளை மற்றும் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

Namakkal Crime News : ஒரே குடும்பத்தை 3 பேர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி காரணம்!

மாதிரிப்படம் (picture credit : Pinterest)

Published: 

16 Dec 2024 07:04 AM

திருமணமான 8 மாதங்களில் புதுமாப்பிளையும், அவரது பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாக பிறகு தனிக்குடித்தனம் செல்ல மனைவி வற்புறுத்தியதால் புதுப்மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வரவாஜ் (50). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி (46). இவர்களுக்கு சுரேந்திரன் (24) என்று ஒரு மகன் இருந்தார். சுரேந்திரனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சனேகா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

ஒரே குடும்பத்தை  சேர்ந்த 3 பேர் தற்கொலை

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என சினோக வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இந்த தம்பதிக்கு இடையே சில நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. மேலும், நாளுக்கு நாள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சினேகா கோபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த சுரேந்திரனும், அவரது தந்தை செல்வராஜும், தாய் பூங்கொடியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று காலையில் நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Also Read : போதும் பா சாமி! ஆதவ் அர்ஜூனா எடுத்த முடிவு.. விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

தனிக்குடித்தனம் செல்ல மனைவி வற்புறுத்தல்

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”புதுமணத் தம்பதிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. சுரேந்தரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சினேகா, கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனால் சுரேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Also Read : கனமழை வெளுக்கப்போகுது… ஆரஞ்சு அலர்ட்.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் என்னென்ன?

இருப்பினும், தற்கொலைக்காக முழு காரணமும் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்றார். திருமணமாக 8 மாதங்களில் புதுப்மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
உங்கள் குழந்தைகள் புத்திசாலிகளா - தெரிந்துக்கொள்வது எப்படி?
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
கோபம் வரும்போது அழுகை வருவது ஏன் - அறிவியல் கூறுவது என்ன?