Air Pollution : தீபாவளி எதிரொலி.. சென்னையில் 3 இடங்களில் மோசமான காற்றின் தரம்!

Diwali Celebration | தீபாவளி பண்டிகையில் புத்தாடை, இனிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் பட்டாசுக்கும் அளிக்கப்படும். சொல்லப்போனால் தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

Air Pollution : தீபாவளி எதிரொலி.. சென்னையில் 3 இடங்களில் மோசமான காற்றின் தரம்!

காற்று மாசு

Updated On: 

01 Nov 2024 13:24 PM

தமிழகத்தில் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சென்னையின் காற்றின் தரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், சென்னை மூன்று இடங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையின் காற்றின் தரம் எந்த நிலையில் உள்ளது, அந்த மூன்று இடங்கள் எவை என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Special Train : தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு குட் நியூஸ்.. அரசு அதிரடி அறிவிப்பு!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, கோயிலுக்கு சென்று, உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி என பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகையில் புத்தாடை, இனிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் பட்டாசுக்கும் அளிக்கப்படும். சொல்லப்போனால் தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : Gas Cylinder Price : அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?

காற்று மாசு நிலவரம் வெளியானது

இவவாறு மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஏராளமான மக்கள் பட்டாசு வெடிப்பதால், தீபாவளி தினத்திற்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னையின் காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே வாகனங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் காற்றின் தரம் மாசுப்பட்டிருக்கும் நிலையில், இது காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கும் விதமாக அமையும். இந்த நிலையில் தான் சென்னையின் காற்று மாசு நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : CSK Retention List IPL 2025: ரச்சின், கான்வே அவுட்.. முக்கிய வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

சென்னை காற்று மாசு

தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் காற்று மாசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரம் மிகவும்  மோசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • சென்னையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, பெருங்குடியில் காற்றின் தர குறியீடு 237 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை வேளச்சேரியில் காற்றின் தர குறியீடு 219 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஆலந்தூரில் தர குறியீடு 211 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Diwali Celebration : எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்.. சீன ராணுவத்தினருக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்!

மோசமான காற்று மாசு கொண்டுள்ள 3 இடங்கள்

இந்த நிலையில், பெருங்குடி, ஆலந்தூர் மற்றும் வேளச்சேரி ஆகிய மூன்று முக்கிய இடங்களில் காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ராயபுரத்தில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாக அளவிடப்பட்ட நிலையில், தற்போது அங்கு காற்றின் தரம் இயல்பு நிலையில் உள்ளது. இதனால் மிக மோசமான காற்றும் மாசு கொண்ட பகுதிகளில் பட்டியலில் இருந்து ராயபுரத்தின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி பெருங்குடி, ஆலந்தூர் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகள் மிக மோசமான காற்று மாசை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : “Alexa Launch the Rocket”.. நவீன முறையில் பட்டாசு வெடித்த இளைஞர்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

சென்னையில் 3 இடங்களில் மட்டும் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 163 என்ற மிதமான அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!