5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சோறு சாப்ட்டியா? க்யூட்டாக பதில் சொன்ன திருச்செந்தூர் தெய்வானை.. வாவ் வீடியோ!

Tiruchendur Deivanai: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை பாகனை தாக்கி கொன்றதால் கடந்த 4 நாட்களாக சோகத்தில் இருந்த நிலையில், மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும், தெய்வானையை இரண்டு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சோறு சாப்ட்டியா? க்யூட்டாக பதில் சொன்ன திருச்செந்தூர் தெய்வானை.. வாவ் வீடியோ!
திருச்செந்தூர் தெய்வானை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Nov 2024 10:22 AM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை பாகனை தாக்கி கொன்றதால் கடந்த 4 நாட்களாக சோகத்தில் இருந்த நிலையில், மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும், சாப்பாடு, தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிடாமல், குளிக்காமல் இருந்த வந்த நிலையில், நேற்று தெய்வானை தனது தும்பிக்கையால் உற்சாக தண்ணீர் பீய்ச்சி அடித்து மகிழ்ந்ததோடு, மருத்துவருக்கு க்யூட்டாக பதிலளித்துள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகனை தாக்கி கென்ற தெய்வானை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 26 வயது தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. இந்த யானைக்கு ராஜாகோபுரம் பகுதியில் தங்குவதற்கு குடில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிலில் சிறிய அளவிலான வலைகள் அமைக்கப்பட்டு பாகங்கள் மூலமக மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

யானை பாகன்களாக ராதாகிருஷ்ணன் (57), அவரது உறவினர்களும், சகோதரர்களுமான செந்தில் குமார் (47), உதயகுமார் (46) ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி காலை வழக்கம்போல் ராதாகிருஷ்ணன், தெய்வானை யானைக்கு பகலில் உணவு வழங்கி உள்ளார்.

பின்னர், அவர் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினராக கன்னியாகுமரி மாவட்ம் பளுகலைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சிசுபாலன் (59) என்பவரும் யானை குடிலுக்கு வந்துள்ளனர்.

அப்போது பாகனின் உறவினர் சிசுபாலன், குடிலுக்கு சென்றவுடன் யானையுடன் நின்று செல்பி எடுத்து, துதிக்கையில் முத்தும் கொடுத்து விட்டு செல்வி எடுத்துள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக யானை, சிசுபாலனை தும்பிக்கையால் கழுத்தை பிடித்து இறுக்கி தாக்கியுள்ளது. அவரை உதயகுமார் காப்பாற்ற முயன்றுள்ளார்.

Also Read : 50 ஆண்டுகளாக மக்கள் சேவை.. ஆலங்குடி ‘515’ கணேசனின்‌ கதை!

சோகத்தில் தெய்வானை

அவரை யானை, தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் உதயகுமார் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர், இருவரையும் கால்களால் மிதித்ததில் பலத்த காயம் அடைந்து மயக்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த பாகன் ராதாகிருஷ்ணன், பணியாளர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர். யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழந்ததை அடுத்து, மருத்தவர்கள் குழு தெய்வானையை பரிசோதித்தனர். பாகன் உயிரிழந்ததால் யானை தெய்வானை சில நாட்களாக சோர்வாக இருந்துள்ளது.

ஒருநாள் முழுவதும் யானை சாப்பிடாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தான் வெறும் பழங்களை சாப்பிட துவங்கியது. பாகன் உதயகுமார் நினைவிலேயே இருந்து வந்தாகவும், பாகன் இறந்து கிடந்த இடத்தையே உற்று பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாட்களாக கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பில் தெய்வானை இருந்து வருகிறது.

Also Read : சென்னையில் 28 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா? நோட் பண்ணுங்க!

தெய்வானை க்யூட் வீடியோ:

இந்த நிலையில்,  பாகனை தாக்கி கொன்றதால் கடந்த 4 நாட்களாக சோகத்தில் இருந்த நிலையில், மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும், சாப்பாடு, தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிடாமல், குளிக்காமல் இருந்த வந்த நிலையில், நேற்று தெய்வானை தனது தும்பிக்கையால் உற்சாக தண்ணீர் பீய்ச்சி அடித்து மகிழ்ந்ததோடு, மருத்துவருக்கு க்யூட்டாக பதிலளித்துள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நேற்று தெய்வானை யானையின் பாகன் செந்தில் வழக்கம் போல் குளிப்பாட்டி அலங்கரித்தார். பின் யானைக்கு வழக்கம் போல் உணவு, தண்ணீர் கொடுப்பட்டது. இதையடுத்து நெல்லை வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் யானை தெய்வானையிடம் சாப்பிட்டியா? தண்ணீர் குடிச்சியா? என கேட்டார்.

அதற்கு தெய்வானை அழகாக தலையசைத்து பதில் அளித்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெய்வானையை மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், பேராசியிர் முத்துகிருஷ்ணன், திருச்செந்தூர் வனச் சரக அலுவலர் கவின், திருசெந்தூர் கால்நடை மருத்துவர்கள் பொன்ராஜ், அருண் உள்ளிட்டோர் கண்காணித்து வருகின்றனர்.

Latest News