Nellai Mayor: நெல்லை மேயர் வேட்பாளர் யார்? அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நெல்லை மேயர் வேட்பாளாராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர். நெல்லை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nellai Mayor: நெல்லை மேயர் வேட்பாளர் யார்? அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நெல்லை மேயர்

Updated On: 

18 Nov 2024 11:13 AM

நெல்லை மேயர் தேர்தல்: திருநெல்வேலியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 51 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. பின்னர், நெல்லை மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இதுகுறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராக புகார் மனு அளித்திருந்தனர். அதேநேரத்தில் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இந்த சூழலில் தான் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை கடந்த மாதம் 3ஆம் தேதி ராஜினாமா செய்திருந்தார்.

இது தொடர்பான கடிதத்தையும் சரவணன் வழங்கினார். அன்றில் இருந்து துணை மேயர் ராஜூ மேயர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

Also Read: ரேஷன் கடைகளில் வந்த அதிரடி மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க மக்களே!

நெல்லை மேயர் வேட்பாளர் யார்?

இதனால் அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்று குறித்து அமைச்சர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். புதிய மேயர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நெல்லை மாநகராட்சியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மேயர் வேட்பாளாராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

Also Read: சில்லென மாறிய சென்னை.. நகரின் அனேக பகுதிகளில் கொட்டும் மழை..

பின்னர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர். இதன்மூலம் நெல்லை மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலர் கிட்டு ராமகிருஷ்ணன் நெல்லை மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2 முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். 3வது முறையாக தற்போது கவுன்சிலராக இருக்கும் ராமகிருஷ்ணன் நெல்லை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மது அருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த வகை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது..