5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சுத்தமாகும் பகுதிகள்.. இனிமேல் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம்..!

மத்திய, மாநில அரசுகள் சார்பில் நாம் இருக்கும் இடங்களை சுற்றி சுகாதாரத்தை பேணுவதற்கான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ச்சியாக சிறுநீர் அல்லது மலம் கழித்தல், குப்பைகளை கொட்டுதல் போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நோய்களும் பரவி வருகிறது.

சுத்தமாகும் பகுதிகள்.. இனிமேல் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம்..!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 28 Oct 2024 12:35 PM

திருநெல்வேலியில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் திறந்த வெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் அபராதம் விதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பேரூராட்சியின் இந்த முடிவு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  “திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்கள் திறந்து வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் பொதுக் கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்தாமல் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சிறுநீர் கழித்தால் ரூபாய் 100ம்,  மலம் கழித்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

Also Read:  TVK first conference: உடைந்த நாற்காலிகள்.. குப்பையான மாநாட்டு திடல்.. விஜய் மாநாட்டின் தற்போதைய நிலை!

தற்போது ஒவ்வொரு வார்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை 17 பேரூராட்சிகள் உள்ள நிலையில் வடக்கு வள்ளியூர் மற்றும் திசையன்விளை பேரூராட்சிகளில் முதல் கட்டமாக இந்த விதிமுறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் நாம் இருக்கும் இடங்களை சுற்றி சுகாதாரத்தை பேணுவதற்கான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ச்சியாக சிறுநீர் அல்லது மலம் கழித்தல், குப்பைகளை கொட்டுதல் போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நோய்களும் பரவி வருகிறது. குறிப்பாக மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் இத்தகைய கழிவு பகுதிகளில் சுற்றி தெரியும் உயிரினங்கள் வீட்டில் இருக்கும் நபர்களின் மீதும், உணவுகளின் மீது வந்து அமர்வதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.

Also Read: Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வழங்கிகள்!

என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் கடைக்கோடி கிராமம் வரை சுகாதார சேவைகள் சென்றடையவில்லை என்றே சொல்லலாம். இன்றைக்கும் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்துவோர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நகர்புறங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஆய்வின் முடிவில் 6சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 26 சதவீதம் பேரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். டாப் 10 பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளனையில் முதல் 5 இடங்களில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது.

Also Read: Weekly Horoscope: பண யோகம் அமையும் ராசிகள்… மேஷம் முதல் கன்னி வரை இந்த வார ராசிபலன்

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஆய்வு முடிவின்படி கோவையில் மட்டும் 20 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதது தெரிய வந்தது. இப்படியான நிலையில் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்தை பேணும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதே சமயம் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் பகுதி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி ஆக செயல்பட்டு வருகிறது.

அதே சமயம் ஒவ்வொரு மாநகராட்சி சார்பிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் சுகாதார சீர்கேடு செய்பவர்களுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட்டும் வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பல நகரங்களில் அபராதம் விதிக்கும்  நடைமுறை இருந்தாலும் அது சரிவர பின்பற்றப்படுவதில்லை. மக்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Latest News