Tiruppur Road Accident: திருப்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.. - Tamil News | tiruppur avinasi car crashed with lorry 2 college going girls and one more person dead know more in details | TV9 Tamil

Tiruppur Road Accident: திருப்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..

தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகாலை நேரங்களில் சாலை விபத்துகள் அதிகப்படியாக நடந்து வருகிறது. குறிப்பாக நின்றிக்கும் வாகனங்கள் மீது கார் அல்லது வேன் மோதி விபத்துக்குள்ளாவது உண்டு. அந்த வகையில் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur Road Accident: திருப்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

26 Oct 2024 08:44 AM

அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலை ஓரத்தில் அதிகாலை நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே சேலம் – கோவை ஆறுவழிச் சாலையில் நேற்று இரவு வண்டியில் டீசல் தீர்ந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த எம். சாண்ட் மண் லாரி மீது இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த கார் லாரி மீது மோதியது. லாரி மீது மோதிய விபத்தில் காரில் வந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படிக்க: 26 நாட்களுக்கு பின் ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. அதிகாலையில் ராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..

காரில் பயணம் மேற்கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் MBA 2-ம் ஆண்டு படித்து வரும் கோவையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகள் அபர்ணா (வயது 26), அவரது தங்கை கோவை அம்ரிதா கல்லூரியில் பொறியியல் படித்து வரும் ஹேமா ( வயது 21) மற்றும் கோவையை சேர்ந்த அண்ணா துரை மகன் மோனிஷ் ( வயது 28) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடனடியாக 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: கனமழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..

மூவரின் உடலும் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்கள் இருவரும் அக்கா தங்கை ஆவார்கள், மோனிஷ் என்பவர் அபர்ணாவின் நண்பர் ஆவார். இரண்டு பெண்களின் தாயார் மகாலட்சுமி என்பவர் வஞ்சிபாளையம் ஸ்ப்ரிங் மவுண்ட் பள்ளியில் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் இருந்த பெண்களை தனது காரில் தினேஷ் கோவைக்கு கூட்டி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைக்காலத்தில் அதிகளவு நன்மை தரும் மிளகு..!
சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..!
வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி - பிளிப்கார்ட் அதிரடி!