5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சாரைப் பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர்.. அதிரடி காட்டிய வனத்துறை!

திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட இளைஞர் கைதாகி உள்ளார்.  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30) இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அந்த வீடியோவில், தோல் உரிக்கப்பட்ட பாம்பை குடல் நீக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் நிரப்பியுள்ள தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்துவது போன்று வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரானது.

சாரைப் பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர்.. அதிரடி காட்டிய வனத்துறை!
பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Jun 2024 14:38 PM

சாரைப் பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர்: திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட இளைஞர் கைதாகி உள்ளார்.  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30) இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அந்த வீடியோவில், தோல் உரிக்கப்பட்ட பாம்பை குடல் நீக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் நிரப்பியுள்ள தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்துவது போன்று வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரானது.

Also Read: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

கைது:

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வானவர் மற்றும் வனப் பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டு பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதும் தெரிய வந்தது. இதன் காரணமாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் ஊருக்குள் புகுந்த தண்ணீரை பாம்பை கொன்றுவிட்டு பின்னர், அதனை கொடி விஷம் கொண்ட பாம்பு என பேசி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: 500 ஆண்டுகள் பழமையான ஆழ்வார் சிலை.. இந்தியாவிடம் திருப்பி தர பிரிட்டன் ஒப்புதல்!

Latest News