5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருப்பத்தூரை அலறவிட்ட சிறுத்தை.. 11 மணி நேரத்திற்கு பிடிபட்டது எப்படி?

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாலை 3.30 மணியளவில் சிறுத்தை நுழைந்துவிட்டதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பள்ளி காவலாளியான கோபால் (68) என்பவரை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு, மாணவர்கள் அவரவர் இருக்கும் வகுப்பறையிலேயே கதவுகளை அடைத்து பத்திரமாக இருந்தனர். பள்ளி முடியும் நேரம் என்பதால் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் வந்தனர்.

திருப்பத்தூரை அலறவிட்ட சிறுத்தை.. 11 மணி நேரத்திற்கு பிடிபட்டது எப்படி?
சிறுத்தை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Jun 2024 11:17 AM

திருப்பத்தூரை அலறவிட்ட சிறுத்தை: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாலை 3.30 மணியளவில் சிறுத்தை நுழைந்துவிட்டதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பள்ளி காவலாளியான கோபால் (68) என்பவரை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு, மாணவர்கள் அவரவர் இருக்கும் வகுப்பறையிலேயே கதவுகளை அடைத்து பத்திரமாக இருந்தனர். பள்ளி முடியும் நேரம் என்பதால் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் வந்தனர். இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் கலக்கமடைந்து தங்களது குழந்தைகள் பற்றி போலீசாரிடம் விசாரித்தனர்.

இதனை அடுத்து போலீசார் பெற்றோர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர், பள்ளி வளாகம் முழுவதும் சிறுத்தையை தேடினர். அப்போது, பள்ளியின் அருகில் உள்ள கார்  ஷெட் ஒன்றில் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியே அனுப்பி பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பள்ளியின் கதவுகளை மூடினர். இதற்கிடையில், கார் ஷெட்டுக்குள் சிறுத்தை வருவதை பார்த்த 5 பேர் அங்கிருந்த காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டனர்.

Also Read: இன்ஸ்டாகிராம் காதலனுக்கு ஐபோன்.. தாயின் நகையை அடகு வைத்த சிறுமி!

பிடிபட்டது எப்படி?

ஒரு காரில் 4 பேரும், மற்றொரு காரில் ஒருவர் என ஐந்து பேரும் காருக்குள் அமர்ந்து கொண்டனர். இதனால், சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கார் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை பதுங்கி இருந்ததால் பிடிக்க முடியாமல் வனத்துறை மற்றும் காவல்துறையினர் திணறி வந்தனர். மேலும், சிறுத்தை பதுங்கி இருந்த கார் நிறுத்தும் இடத்தில் காரில் இருந்த ஐந்து பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக ஏணி மூலம் ஐந்து பேரை பத்திரமாக மீட்டனர்.

இதனை அடுத்து, சிறுத்தையை பிடிக்க ஓசூர் மற்றும் தருமபுரியில் இருந்து இரண்டு குழுக்கள் வரவழைக்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட முயற்சியில் ஈடுபட்டும் சிறுத்தையை பிடிக்க முடியாததால் விடிய விடிய சிறுத்தையை பிடிக்கும் பணி சென்றது. இறுதியாக சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

இதனை அடுத்து, சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்து பாதுகாப்பாக காட்டிற்குள் கொண்டு சென்று விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை வனப்பகுதியில் வனத்துறையினரால் சிறுத்தை விடப்பட்டது. பிடிப்பட்ட சிறுத்தை ஆண் சிறுத்தை எனவும், சுமார் 4 வயது சிறுத்தைக்கு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை நடமாட்டம் மக்களை அச்சடையச் செய்துள்ள நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: ஜூன் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Latest News