5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tiruvallur Train Accident: ”இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தி காட்டம்..

இரண்டு ரயில்கள் மோதியதில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் புரண்டு அடுத்து இருக்கும் தண்டவாள பாதையில் ஆக்கிரமித்தது. ரயில் பெட்டிகளை அப்புரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுமார் 13 ரயில்கள் மற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

Tiruvallur Train Accident: ”இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தி காட்டம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Oct 2024 10:45 AM

திருவள்ளூர் கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பல முறை பல விபத்துகள் நடந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்ட போது மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் இன்னும் எத்தனை குடும்பங்கள் உயிரிழக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. மைசூர் தர்பங்கா விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் இந்த விபத்து நடந்துள்ளது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி உள்ளது. மைசூருவிலிருந்து தர்பங்காவிற்குச் பாக்மதி சென்று கொண்டிருந்த பாக்மக்தி விரைவு ரயில், கவரப்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த  சரக்கு ரயில் மீது  மோதியது.

இரண்டு ரயில்கள் மோதியதில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் புரண்டு அடுத்து இருக்கும் தண்டவாள பாதையில் ஆக்கிரமித்தது. ரயில் பெட்டிகளை அப்புரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுமார் 13 ரயில்கள் மற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இந்த ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ மைசூரு – தர்பங்கா ரயில் விபத்து, பாலாசூர் பயங்கர விபத்தை பிரதிபலிக்கிறது – பயணிகள் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது.

பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகியிருந்தாலும், மத்திய அரசு பாடம் கற்கவில்லை. பொறுப்புக்கூறல் மேலே இருந்து தொடங்குகிறது. இந்த அரசு விழித்துக்கொள்ளும் முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்கப்பட வேண்டும்?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரயில் விபத்து குறித்து, தென்னக ரயில்வே வளியிட்டுள்ள அறிக்கையில், “ ஸ்ரீ ஏ.எம். சவுத்ரி, ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம், பெங்களூரு, கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் இன்று, அக்டோபர் 12, 2024 தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் சட்டப்பூர்வ ஆய்வு நடத்தினார். தடங்கள், புள்ளிகள் மற்றும் தொகுதிகள், சிக்னல்கள், ஸ்டேஷன் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம்ஸ், கண்ட்ரோல் பேனல்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க பாதுகாப்பு, சிக்னல் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் ஆகியவற்றின் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது.

காயமடைந்தவர்களில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பயணிகளுக்கும், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறு பயணிகளுக்கும், விதிமுறைப்படி கருணைத் தொகை வழங்கப்பட்டது.

Also Read: 15 ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை.. இனி வெயில் இல்லை.. வானிலை சொல்வது என்ன?

மற்ற பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர், இன்று காலை தர்பங்காவிற்கு சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக சென்னை சென்ட்ரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில், 11 அக்டோபர் 2024 அன்று இரவு 08.30 மணியளவில் சென்னை கோட்டத்தில் உள்ள கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளான ரயில் எண்.12578 மைசூரு – தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிய பயணிகள் அதிகாலையில் பொன்னேரி மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் மூலம் பேருந்துகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

சென்னை சென்ட்ரலில், ரயில்வே டாக்டர்கள் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு, அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழியாக தர்பங்கா நோக்கி பயணிகள் சிறப்பு ரயிலில் ஏற்றப்பட்டனர். சிறப்பு ரயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 04.45 மணிக்கு 1800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்

Latest News