Tiruvannamalai Landslide: நிலச்சரிவில் சிக்கிய 7 பேர்.. இதுவரை மீட்கப்பட்ட 6 உடல்கள்.. ஒருவரின் நிலைமை என்ன..?
Fengal Cyclone: மீட்பு பணியின்போது மண்ணை வெளியேற்றும் பொக்லைன் இயந்திரத்தின் முன்பக்க கொக்கி போன்ற அமைப்பில் 2 பேரின் உடல்கள் சிக்கி மீட்கப்பட்டது. இதில் ஒருவர் சிறுவனின் உடல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்த செய்தியானது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த எதிர்பாராத திடீர் நிலச்சரிவில் 7 பேர் சிக்கியதாக தகவல் வெளியாகி வந்தது. இதையரிந்து மீட்பு வேகமாக நடைபெற்ற நிலையில், முதலில் ஒரு சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மேலும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 4 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் தவித்து வந்த சூழ்நிலையில், மேலும் மூவரின் உடல்கள் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு நேரடியாக சென்று அதிகாரிகளிடம் மீட்புப் பணி குறித்த முழு விபரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கியுள்ள மேலும் ஒருவரின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ: School Leave: நாளை (டிச.03) பள்ளிகளுக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
என்ன நடந்தது..?
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களுக்கும் மேலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு இந்த தொடர் மழையினால் திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறத்தில் உள்ல சுமார் 2,700 அடி மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு ஓடியது. அப்போது, அந்த பாறை நேராக மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வஉசி நகர் பகுதி 11 வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் பாய்ந்தது.
பாறையை தொடர்ந்து, பாறையை பிடிந்திருந்த மண்ணும் நீருடன் சேர்ந்து அப்பகுதிகள் புகுந்தது. இதனால், அந்த பகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்குள் மண் முழு ஈரப்பதத்துடன் இறங்கியது. இதில், மழைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டை மட்டும் மண் முழுவதுமாக மூழ்கடித்தது. அப்போது, இந்த எதிர்பாராத நிகழ்வை எதுவும் அறியாது அந்த வீட்டில் குடியிருந்த கணவன், மனைவி, இவர்களின் 2 குழந்தைள் மற்றும் கணவரின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் சிக்கி கொண்டனர். மண் சரிவினால் 7 பேரும் தப்பித்து வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிய இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இதுகுறித்து உடனடியாக தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அதிவிரைவாக மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்த மீட்பு பணியின்போது மண்ணை வெளியேற்றும் பொக்லைன் இயந்திரத்தின் முன்பக்க கொக்கி போன்ற அமைப்பில் 2 பேரின் உடல்கள் சிக்கி மீட்கப்பட்டது. இதில் ஒருவர் சிறுவனின் உடல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்த செய்தியானது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீட்பு பணியில் இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது 7வது நபர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை தெரியவில்லை.
ALSO READ: Cyclone Fengal: வெள்ள பாதிப்பு! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தொடர்ந்து மண் சரிவில் சிக்கிய நபரை மீட்கும் பணியில் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மண் சரிவில் புதையுண்டு 24 மணி நேரத்திற்கு பிறகு உடல்கள் மீட்கப்பட்டது. ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.