தூய்மை பணியாளர் சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்து போன முதலமைச்சர் ஸ்டாலின்!
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த அந்த சம்பவம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.810 கோடியில் முடிவற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் சிறப்புரை ஆற்றினார்.
முதலமைச்சர் ஸ்டாலின்: சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருந்தளித்த நிகழ்வில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த அந்த சம்பவம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.810 கோடியில் முடிவற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் சிறப்புரை ஆற்றினார். அப்போது, “நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்ற ஆட்சியர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பதாகவும் பொருளாதாரத்தை வளர்க்கும் தொழில்கள் நிறைந்த மாவட்டம் நாமக்கல்” எனவும் புகழாரம் சூட்டினார்.
அப்போது, “எனக்கு தினமும் வாட்ஸ் அப்பில் நிறைய வீடியோக்கள் வருகிறது. மக்களின் அன்பும் பாராட்டும் நிறைந்த சில வீடியோக்களை நாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் கொடுக்கும் ரூ.1,000ல் தான் நான் மாத்திரை மருந்து வாங்குகிறேன் என ஒரு மூதாட்டி கூறினார். ஒரு மாணவி புதுமைப் பெண் திட்டத்தில் வரும் ரூ.1,000ல் எனது கல்வி கனவு நனவாகி இருக்கிறது என தெரிவித்தார். இப்போது நான் மூன்று லட்சம் மதிப்புள்ள ஆட்டோவிற்கு ஓனராக இருக்கிறேன் என திருநங்கை ஒருவர் பெருமையாக சொல்கிறார். மாற்றுத்திறனாளிகளை ஸ்டாலின் அரசு செல்ல பிள்ளைகளாக பார்க்கிறது என ஒரு மாற்றுத்திறனாளி சகோதரி சொல்கிறார்.
Also Read: Cyclone Dana: டானா புயல் எதிரொலி.. தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து!
எல்லாவற்றுக்கும் மேலாக சென்னையில் மழை பெய்த போது நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டு நிலைமையை கையாண்டது. அப்போது அரசின் செயல்பாடுகளுக்கு பெருந்துணையாக தூய்மை பணியாளர்கள் இருந்தனர். அவர்களைப் பாராட்டும் பொருட்டு தேவையான உதவிகள் செய்து மதிய உணவு அனைவருடனும் சாப்பிட்டேன். நீங்கள் எல்லோரும் அதனை டிவி, சமூக வலைத்தளங்கள் மூலமாக பார்த்திருப்பீர்கள்.
அப்போது ஒரு தூய்மை பணியாளர் என்னிடம் வந்து பேசினார். எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என அந்த தூய்மை பணியாளர் தெரிவித்தார். இதைவிட பெரிய பாராட்டு எனக்கு என்ன வேண்டும். ஊரை தூய்மைப்படுத்தும் உள்ளங்களோடு சாப்பிடுவது தான் எனக்கு பெருமை. இதுதான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என பேரறிஞர் அண்ணா சொன்னார். அண்ணா சொன்னதை தான் அவரின் தம்பிகளான நாங்கள் செய்து காட்டியுள்ளோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், “கல்லூரியில் பயிலும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெறுவதில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்கள் அதிகமாக பயன்பெறும் மாவட்டமாக இரண்டாவது இடத்தில் நாமக்கல் உள்ளது எனவும் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 10 கோடி நிதி ஒடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Also Read: Bengaluru: பெங்களூருவில் கனமழை.. இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு கூட்டங்களை கடந்த சில நாட்களாக நடத்தி வருவதாகவும் கூறினார். திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் எனவும் அவர் சூளுரைத்தார். அதேசமயம் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இந்த உலகத்தில் தான் இருக்கிறாரா அல்லது கனவு உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களிலேயே நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் அதிக இடங்களை கைப்பற்றியது எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் மதிப்பையே எடப்பாடி பழனிச்சாமி அடமானம் வைத்ததாகவும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தியதால் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து விட்டது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார். மேலும் மக்களோடு மக்களாக இருந்து உழைத்துக் கொண்டிருப்பதால் தான் தொடர்ந்து திமுக வெற்றி அடைந்துள்ளது எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.