CM Stalin: அமெரிக்கா புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பிய அமைச்சர்கள், தொண்டர்கள்!

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொடர்ந்து இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று, தமிழகத்திற்கு பல முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்த பயணங்களால், 18,521 நபர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.  10,182 கோடி ரூபாய்க்கு 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 990 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்கள் செயல்படத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார். 

CM Stalin: அமெரிக்கா புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பிய அமைச்சர்கள், தொண்டர்கள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

27 Aug 2024 22:04 PM

அமெரிக்கா பயணம்: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். 17 நாட்கள் பல்வேறு நாடுகளுக்கும் செல்லும் அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொடர்ந்து இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று, தமிழகத்திற்கு பல முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்த பயணங்களால், 18,521 நபர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.  10,182 கோடி ரூபாய்க்கு 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 990 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்கள் செயல்படத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ பயணமாக அமெரிக்கா செல்கிறேன், செப்டம்பர் 14-ம் தேதிக்குள் திரும்புவேன்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, “மாற்றம் ஒன்று தான் மாறாதது. வெயிட் அண்ட் சீ” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். முன்னதாக இன்று காலை வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், “அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்குப் பயணமாகிறேன். அயல்நாட்டில் இருந்தாலும் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தப்பட்டுள்ள வசதிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஆட்சிப் பணியும் கழகப் பணியும் தொய்வின்றித் தொடர்வதைக் கண்காணித்து உறுதிசெய்வேன்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: New BCCI Secretary: ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வான ஜெய்ஷா..

முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் டிஆர்பி ராஜாவும் அமெரிக்கா செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் சிறக்க, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல்

 

  • ஆகஸ்ட் 29 – சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு
  • ஆகஸ்ட் 31 –  புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு
  • செப்டம்பர் 2 – சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம்
  • 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன். ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன்.
  • செப்டம்பர் 7- சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு

ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?
ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?