Ajithkumar: ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அஜித்தை அழைத்த உதயநிதி ஸ்டாலின்! - Tamil News | Tn deputy cm udhayadhi stalin appreciated actor ajithkumar | TV9 Tamil

Ajithkumar: ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அஜித்தை அழைத்த உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: உதயநிதியின் இந்த வாழ்த்து சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மறுபுறம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய விஜய் திமுகவை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக திராவிட மாடல் அரசு என சொல்லிக்கொள்ளும் கூட்டம் தன்னுடைய அரசியல் எதிரி என தெரிவித்தார்.

Ajithkumar: ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அஜித்தை அழைத்த உதயநிதி ஸ்டாலின்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

30 Oct 2024 10:47 AM

அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ள கார் ரேசிங் அணியின் லோகோ உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளதை அத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class  என்ற கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவானது அஜித்குமார் ரேசிங் யூனிட்டின் கார் ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

Also Read: TN Govt Jobs: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி ஊக்குவித்துள்ள அஜித்துக்கு துறை சார்பாக எங்களது நன்றியை தெரிவிக்கிறோம். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்,  Formula 4 சென்னை கார் பந்தய போட்டி போன்ற முன்னெடுப்புக  ஆகியவற்றை வாழ்த்திய அஜித்துக்கு எங்கள் அன்பும் நன்றியும் கூறுகிறோம். விளையாட்டு துறையை தமிழ்நாட்டு உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித்” என தெரிவித்துள்ளார்.

Also Read: Diwali: தீபாவளி தன திரயோதசி எம தீபம் ஏற்றும் முறை… இதை யாரெல்லாம் ஏற்றக்கூடாது..?

உதயநிதியின் இந்த வாழ்த்து சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மறுபுறம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய விஜய் திமுகவை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக திராவிட மாடல் அரசு என சொல்லிக்கொள்ளும் கூட்டம் தன்னுடைய அரசியல் எதிரி என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சுக்கள் திமுக தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என அனைவரும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

இப்படியான நிலையில் விஜய்யை விமர்சிக்கும் வகையில்  மறைமுகமாக அஜித்துக்கு பாராட்டு தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்துக்கு கார் பந்தயத்தின் மீது ஏகப்பட்ட ஈடுபாடு உண்டு. பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி, தோல்வி என பார்த்த அவருக்கு பந்தய களத்தில் நடந்த விபத்துகளும் ஏராளம். உடம்பில் பல இடங்களில் அறுவைச் சிகிச்சை செய்த அவர், 15 ஆண்டுகளாக கார் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதனிடையே கடந்த ஓராண்டாக மீண்டும் பைக்கில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிய அஜித் மீண்டும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் கார் பந்தயம் தொடர்பானவர்களுடன் ஆலோசனை நடத்திய புகைப்படம் வெளியானது அந்த தகவல் உறுதியானது.

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா? இதை பண்ணுங்க
குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க
படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?