சில்லறை பிரச்னைக்கு தீர்வு… அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகம்.. எவ்வாறு செயல்படும்? - Tamil News | | TV9 Tamil

சில்லறை பிரச்னைக்கு தீர்வு… அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகம்.. எவ்வாறு செயல்படும்?

Updated On: 

08 May 2024 08:54 AM

அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சில்லறை பிரச்னைக்கு தீர்வு... அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகம்.. எவ்வாறு செயல்படும்?
Follow Us On

அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ வசதி:

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அசுர வளர்த்தி அடைந்துவிட்டது. அதற்கேற்ப ஜிபோ, போன்பே, பேடிஎம் என பல்வேறு செயலிகளிலும் சிறிய வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகக்கடை வரை யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் அரசு விரைவு பேருந்துகளிலும் யுபிஐ பயன்பாடு கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கைகள் விடுத்தனர். அதன்படியே தமிழ்நாடு போக்குவரத்து கழகமும் யுபிஐ பயன்பாட்டை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Also Read : இது தெரியாமல் நாய் வளர்க்காதீங்க..கண்டிஷன் போட்ட சென்னை மாநகராட்சி

1068 பேருந்துகளில் யுபிஐ வசதி:

இந்த நிலையில், முதற்கட்டமாக 1068 பேருந்துகளில் யுபிஐ வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 328 ஏசி பேருந்துகள் உள்பட 1068 பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

டெபிட், கிரெடிட் கார்டுகள், யுபிஐ பரிவர்த்தனை வழியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் மாநகர பேருந்துகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது விரைவு பேருந்துகளில் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.

எவ்வாறு செயல்படும்?

இந்த வசதிய பொறுத்தவரை, நடத்துனரிடம் இருக்கும்  க்யூஆர்கோர்டு இருக்கும். எனவே, நடத்துனரிடம் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் விவரங்களை கூறினால் அவர்கள் க்யூஆர் கோர்டை காண்பிப்பார். அதன்பின், வழக்கம்போல், க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்த வேண்டும்.

டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்தியதை  நடத்துனரிடம் காட்டினால் உங்கள் பயணத்திற்கான டிக்கெட் கொடுக்கப்படும். சென்னை மாநகர பேருந்துகளில் சோதனை முயற்சிக்காக சில பேருந்துகளில் மட்டும் யுபிஐ வசதி இருக்கிறது. வரும் காலங்களில் இந்த வசதி அனைத்து மாநகர பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Also Read : கொளுத்தும் கோடை வெயில்! சென்னையில் மழை பெய்யலாம்.. வானிலை மையம் குளுகுளு தகவல்!

பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version