Special Buses: தொடர் விடுமுறை எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! - Tamil News | tn government announced special buses for continuous holidays | TV9 Tamil

Special Buses: தொடர் விடுமுறை எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

Published: 

11 Sep 2024 21:59 PM

பொதுவாக பண்டிகை காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இது கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் பேருந்துகள் இயக்கும் அளவிற்கு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டண கொள்ளை, ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத நிலை என பல காரணங்களால் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை நாடி வருகின்றனர்.

Special Buses: தொடர் விடுமுறை எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Follow Us On

சிறப்பு பேருந்துகள்: தொடர் விடுமுறை காரணமாக செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இது கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் பேருந்துகள் இயக்கும் அளவிற்கு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டண கொள்ளை, ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத நிலை என பல காரணங்களால் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை நாடி வருகின்றனர். குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் தற்போது நவீனமயம் ஆக்கப்பட்டு இயக்கப்படுவதால் பொதுமக்கள் விரும்பி பயணிக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண பேருந்து, இருக்கை வசதி மட்டும் கொண்ட பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர்சாதனப் பேருந்து என பல வகைகளில் தொலை தூர ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் மிகச் சிறப்பான முறையில் லாபம் பார்த்து வருகிறது.

மாற்றப்பட்ட மிலாடி நபி விடுமுறை

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேதி ஓணம் பண்டிகை மற்றும் செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி ஆகிய இரு பண்டிகைகள் வருகிறது. 14 ஆம் தேதி சனிக்கிழமை என்பதாலும், கடந்த வாரம் வரை மிலாடி நபி செப்டம்பர் 16 என தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது. இதனால் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் திடீரென மிலாடி நபி செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதால் நடுவில் இருக்கும் ஒரு நாளும் விடுமுறை எடுத்து மக்கள் நான்கு நாட்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள்

இப்படியான நிலையில் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் 13 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) செப்டம்பர் 14 (சனிக்கிழமை)  செப்டம்பர் 15 (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்/ ஓணம்} மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13 முதல் 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 13 (வெள்ளிக் கிழமை) மற்றும் செப்டம்பர் 14 சனிக்கிழமை) ஆகிய நாட்களில் 955 பேருந்துகளும் இயக்க இட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு அகிய இடங்களுக்கு செப்டம்பர் 13 (வெளளிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 14 (சனிக்கிழமை) அன்று 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து  இந்த 2 நாட்களில் மேற்கூறிய இடங்களிலிருந்தும் 20 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கு திட்டமிடப்பட்டுள்ளது

மேலும் ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 21,849 பயணிகளும், சனிக்கிழமை அன்று 11,724 பயணிகளும், ஞாயிறு அன்று 14,271 பயணிகளும், திங்கட்கிழமை அன்று 11,710 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc. in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version