Thiruttani: அப்படிப்போடு.. திருத்தணி முருகன் கோயில் செல்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

Aadi Krithigai 2024: ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், 4 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவும் உள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் 50000 பேருக்கு உணவு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படவும் உள்ளது.

Thiruttani: அப்படிப்போடு.. திருத்தணி முருகன் கோயில் செல்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

25 Nov 2024 09:35 AM

திருத்தணி முருகன்: முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோயில் ஆடிக்கிருத்திகை பெருவிழாவானாது நாளை (ஜூலை 27) முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மிகச்சிறப்பாக நடந்து வரும் நிலையில் பக்தர்களுக்கு சிறப்பான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழி தரிசன கட்டணமாக பக்தர்களிடம் ஒருவருக்கு ரூ.200 என வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த தொகையை குறைக்குமாறு பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனிடையே ஆடிக்கிருத்திகை மட்டுமல்லாமல் திருப்படி திருவிழா நடைபெறும் நாட்களிலும் இந்த கட்டணத்தொகை ரூ.100 ஆக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  போராட்டமே வாழ்க்கையாக இருக்கா? – செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

முன்னதாக 5 நாட்கள் ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கடந்த ஜூலை 23ம் தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், திருத்தணி நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை என அனைத்து துறைகள் மூலம் ஆடிக்கிருத்திகை நாட்களில் திருத்தணியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

கடந்தாண்டு ஆடிக்கிருத்தை விழாவுக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள். நடப்பாண்டு அதை விட கூடுதலாக 25% பக்தர்கல் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே 120 இடங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியும், 160 இடங்களில் கழிப்பிட வசதியும், 60 இடங்களில் குளியலறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 160க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வசதி செய்யப்பட்டு பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுவதோடு, பொது தகவல் அறிவிப்பு மையமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருக்கோயில் வளாகம் மட்டுமல்லாமல் மலைப்பாதை முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் பிரகாரம் முழுக்க தேங்காய் நாரால் செய்யப்பட்ட தரை விரிப்பு ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: சபரிமலை போகிறவர்கள் மறக்காமல் இந்த கோயிலுக்கும் போங்க!

அதேசமயம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், 4 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவும் உள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் 50000 பேருக்கு உணவு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படவும் உள்ளது. மருத்துவ குழுவாக அப்பல்லோ, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, காவேரி மருத்துவமனை செயல்பட உள்ளது.திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் அன்று சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திருத்தணியில் கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்