5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mudhalvar Marundhagam: ஜனவரியில் முதல்வர் மருந்தகம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

முதல்வர் மருந்தகம் திட்டத்தை செயல்படுத்த கடந்த அக்டோபர் 29ஆம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் மாவட்டம்தோறும் மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ஆகியோர் துறைகளின்  அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.

Mudhalvar Marundhagam: ஜனவரியில் முதல்வர் மருந்தகம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 04 Nov 2024 19:38 PM

முதல்வர் மருந்தகம்: 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள முதலமைச்சர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏற்கனவே முந்தைய அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்ட அம்மா மருந்தகம் மற்றும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மலிவு விலை மருந்தகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மக்கள் நலன் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Also Read: கோடி கோடியாக பணம்.. உலகின் முதல் டிரில்லியனர் யார்? லிஸ்டில் இருக்கும் 2 இந்தியர்கள்!

முதல்வர் மருந்தகம் திட்டம் 

இப்படியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் பொதுவான மருந்துகள் மற்றும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தர குடும்பங்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டிய தேவை உள்ளதால் அதிகளவில் செலவு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பொதுப்பெயர் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை குறைந்த விலையில் கிடைக்க செய்ய முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என அறிவித்தார். இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட பங்களிக்கும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு ரூ.3 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

மருந்தகம் அமைக்க அழைப்பு

இதனுடைய முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும் இந்த முதல்வர் மருந்தகத்தை பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த கடந்த அக்டோபர் 29ஆம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் மாவட்டம்தோறும் மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ஆகியோர் துறைகளின்  அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.

Also Read: பெண்களுக்கு அரசு வேலை.. கல்வித்தகுதி இல்லை.. மாதம் ரூ.15,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும், மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் போன்ற மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு துறையால் கொள்முதல் செய்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள அவர்கள் கூட்டுறவு துறை மூலம் https://www.mudhalvarmarundhagam.tn.gov.in  என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகளும் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் மூலம் முதல்வர் மருந்தகங்கள் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News