5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPS Officers: தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. யாரெல்லாம் தெரியுமா?

TN Government: 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அவ்வப்போது அனைத்து துறை அதிகாரிகளும் அவ்வப்போது பணியிடமாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆக உள்ள தினகரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

IPS Officers: தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. யாரெல்லாம் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 04 Aug 2024 14:46 PM

ஐபிஎஸ் அதிகாரிகள்: தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அவ்வப்போது அனைத்து துறை அதிகாரிகளும் அவ்வப்போது பணியிடமாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆக உள்ள தினகரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி., ஆக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு காவலர் வீட்டு வசதி கழக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணைய ஐ.ஜி., ஆக இருந்த மகேஸ்குமார் ரத்தோட்  சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read: Tamilnadu Weather Alert: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எங்கெங்கு தெரியுமா?

சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும், நெல்லை சரக டிஐஜியாக , காவல் ஆணையராக இருந்தரி மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதே மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி, காவல் தலைமையிட ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read: Stain Removal Tips: சமையலறை முதல் படுக்கை அறை வரை.. பிடிவாதமான கறைகளை நீக்க செம டிப்ஸ்கள்..!

வேலூர் சரக டிஐஜி ஆக தேவராணியும், சென்னை பெருநகர கிழக்கு இணைய ஆணையராக சரோஜ்குமார் தாக்கூரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி., ஆக நஜ்முல் ஹூடா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே டி.ஐ.ஜி., ஆக அபிஷேக் தீக்‌ஷித் பொறுப்பேற்க உள்ளார். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ஆக அபினவ் குமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பொறுப்பில் இருந்த காவலர் நல்வாழ்வு பிரிவு டி.ஐ.ஜி., ஆக பொறுப்பேற்கிறார்.

Latest News