Youtuber Irfan: இர்ஃபான் விவகாரம்.. 10 நாட்கள் மருத்துவமனை செயல்பட தடை, ரூ.50 ஆயிரம் அபராதம்! - Tamil News | | TV9 Tamil

Youtuber Irfan: இர்ஃபான் விவகாரம்.. 10 நாட்கள் மருத்துவமனை செயல்பட தடை, ரூ.50 ஆயிரம் அபராதம்!

இர்ஃபான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டிய காட்சிகள் கடும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க மாநில சுகாதாரத்துறை சார்பில் இர்ஃபான் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Youtuber Irfan: இர்ஃபான் விவகாரம்.. 10 நாட்கள் மருத்துவமனை செயல்பட தடை, ரூ.50 ஆயிரம் அபராதம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 Oct 2024 22:39 PM

யூட்யூபர் இர்ஃபான்: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது மனைவிக்கு பிரசவம் நடந்த நிகழ்வை தொகுத்து வீடியோவாக வெளியிட்ட  விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இர்ஃபான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டிய காட்சிகள் கடும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க மாநில சுகாதாரத்துறை சார்பில் இர்ஃபான் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சோழிங்கநல்லூரில் இருக்கும் அந்த மருத்துவமனை அடுத்த 10 நாட்கள் செயல்பட தடை விதித்து மாநில பொது சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் எனவும்,  புதிதாக நோயாளிகளை அனுமதிக்ககூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: Evening Digest 23 October 2024: விஜய்யின் அரசியல் ஆட்டம்.. சிக்கலில் இர்ஃபான்.. இன்றைய டாப் 10 செய்திகள்!

நடந்தது என்ன?

யூட்யூப் வலைத்தளத்தில் “இர்ஃபான்ஸ் வியூ” என்ற சேனலை நடத்தி வருபவர் இர்ஃபான். இவர் உள்ளூர் முதல் உலகம் வரை ஒவ்வொரு இடங்களுக்கு நேரில் சென்று அங்கு பிரபலமான உணவுகளை எல்லாம் ருசி பார்த்து அதனைப் பற்றி விமர்சனம் செய்து வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இதனால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர். இவருக்கு யூட்யூப்பில் மட்டும் 40 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இர்ஃபான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக தோன்றியிருந்தார்.

இதனிடையே தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் பெரியவர் முதல் சிறியவர் வரை இணையத்தை நல்ல மற்றும் கெட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பலரும் அதனை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பலவிதமாக உபயோகித்து வருகின்றனர். இதில் சிலர் சட்ட விதிகளை மீறுவதால் பிரச்னை ஏற்படுகிறது. அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள், சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளம் ஆகியவை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்படியான நிலையில் தமிழகத்தின் பிரபல யூட்யூபராக திகழும் இர்ஃபானும் தனது மகள் விஷயத்தில் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

Also Read: Wayanad Constituency: வயநாடு மக்களே என் தங்கச்சியை பாத்துக்கோங்க.. ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

தன்னுடைய இர்ஃபான்ஸ் யூடியூப் சேனலில் கடந்த வாரம் இறுதியில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது கர்ப்பமாக இருந்த மனைவி வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தது வரை காட்சிகள் இடம்பெற்றிருந்தது. கடந்த ஜூலை 24 ஆம் தேதி அவரது மனைவிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அந்த வீடியோவில் பிரசவ வலியால் அவர் மனைவி துடிக்கும் காட்சியும், குழந்தை பிறந்தவுடன் அதை இர்ஃபான் கையில் ஏந்தும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

அதுமட்டுமல்லாமல் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவதும் காட்சியும் இருந்தது. அந்த வீடியோவை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்த நிலையில் அந்த நிகழ்வு தான் சர்ச்சையை கிளப்பியது. மருத்துவ சட்டத்தின்படி பிரசவ அறையில் கணவருக்கு அனுமதி உண்டு என விதிமுறை உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ முறைகளை பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், முறையான பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை உபகரணங்களை உபயோகிக்க வேண்டும் என்ற மருத்துவ விதிமுறைகள் உள்ளது.

ஆனால் இர்ஃபான் அறுவை சிகிச்சை அறைக்குள் வீடியோ எடுத்து அதனை யூட்யூப்பில் வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியதற்கும் இணையவாசிகள், மருத்துவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்ர். இது தவறான முன்னுதாரணம் எனவும் விமர்சித்த நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இர்ஃபான் விவகாரத்தில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?
நடிகை அனு இம்மானுவேல் பற்றிய சுவராஸ்ய தகவல் இதோ..!
இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?