5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pink Auto: பிங்க் ஆட்டோ திட்டம்.. பெண்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார். அவர் தலைமையிலான அரசு தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் சென்னையில் பிங்க் ஆட்டோ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

Pink Auto: பிங்க் ஆட்டோ திட்டம்.. பெண்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 22 Oct 2024 21:29 PM

பிங்க் ஆட்டோ திட்டம்: சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து வகையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார். அவர் தலைமையிலான அரசு தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் சென்னையில் பிங்க் ஆட்டோ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்ட தெரிந்த பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக நல ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு பெண்கள் நலன் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் மகளிர் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்,  தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்தது, புதுமைப்பெண் திட்டம் போன்ற பல புதிய மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Also Read: Cyclone Dana: டானா புயல் எதிரொலி.. தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து!

இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிவகைகளையும் செய்துள்ளது. பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வரும் நிலையில் அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் ஒரு புதிய முன்னெடுப்பாக பிங்க் நிற ஆட்டோக்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. பெண் ஓட்டுநர்கள் மூலம் முதற்கட்டமாக 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளது.

இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவது உறுதி செய்யப்படவுள்ளது. மேலும் அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன் காவல்துறை மூலம் விரைவாக நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் பெண்கள் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் சுயதொழிலில் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்தவும், ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும் என நம்பப்படுகிறது.

Also Read: Crime: காதலனை சந்தித்த திருமணமான பெண்.. கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்!

இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதி தேவையான தகுதிகள்

  • பெண்கள் மட்டுமே திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • 25 முதல் 45 வயதிற்குள்ளாக பெண்கள் இருக்க வேண்டும்.
  • இவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • சென்னையில் மட்டுமே குடியிருக்க வேண்டும்.

இதற்காக சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சிஎன்ஜி / ஹைபிரிட் ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் கடன் உதவி தொகை பெற வசதிகள் மேற்கொள்ளப்படும்.  எனவே சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டும் என்றால் சமூல நல அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். அதாவது,

சமூக நல அலுவலர்,
8வது தளம்,
சிங்காரவேலர் மாளிகை,
சென்னை -60001.
என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 23 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

Latest News