5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cyber Crime: சமூகவலைத்தளத்தில் அனுமதியின்றி புகைப்படம் வெளியிட்டால் சிறை தண்டனை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்நாப்சாட், டெலிகிராம் என ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட நிலையில் இவற்றில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கணக்கு தொடங்கி உபயோகித்து வருகின்றனர். அதேசமயம் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளும் உள்ளதால் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட பலவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

Cyber Crime: சமூகவலைத்தளத்தில் அனுமதியின்றி புகைப்படம் வெளியிட்டால் சிறை தண்டனை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Aug 2024 20:23 PM

சென்னை காவல்துறை: அனுமதியின்றி தனி நபரின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது கணிக்க முடியாத அளவில் உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்நாப்சாட், டெலிகிராம் என ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட நிலையில் இவற்றில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கணக்கு தொடங்கி உபயோகித்து வருகின்றனர். அதேசமயம் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளும் உள்ளதால் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட பலவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

Also Read: IPL 2025: ஜாம்பவானை குறிவைத்து தூக்கிய லக்னோ.. வழிகாட்டியாக களமிறங்கும் ஜாகீர் கான்..!

இதனைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலமாக சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவருடைய புகைப்படம் வெளியிட்டால் கூட அதனை பல வகையாக சித்தரித்து மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், முதியோர்களை குறிவைத்து இந்த சைபர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.  மேலும் போலியாக ஐடி உருவாக்கி நண்பர்கள் வட்டத்தில் பணம் கேட்பது, ஏதேனும் லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்யும்போது நமது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடுவது, ஆபாச உரையாடல் என பல வகையான குற்றங்களும் நடந்து வருகின்றன. இந்தக் குற்ற சம்பவங்களை குறைக்க மத்திய மாநில அரசுகள் சார்பிலும் சரி காவல்துறை சார்பிலும் சரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் இந்த அறிவிப்பை சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் ஆன்லைனில் தனியுரிமைகளை மதிக்கவும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 இ படி தனிநபரின் படங்களை அனுமதி இன்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் என்ன தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest News