Cyber Crime: சமூகவலைத்தளத்தில் அனுமதியின்றி புகைப்படம் வெளியிட்டால் சிறை தண்டனை – சென்னை காவல்துறை எச்சரிக்கை! - Tamil News | tn police warning imprisonment of up to 3 years for posting pictures of an individual on social media without permission | TV9 Tamil

Cyber Crime: சமூகவலைத்தளத்தில் அனுமதியின்றி புகைப்படம் வெளியிட்டால் சிறை தண்டனை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!

Published: 

28 Aug 2024 20:23 PM

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்நாப்சாட், டெலிகிராம் என ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட நிலையில் இவற்றில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கணக்கு தொடங்கி உபயோகித்து வருகின்றனர். அதேசமயம் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளும் உள்ளதால் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட பலவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

Cyber Crime: சமூகவலைத்தளத்தில் அனுமதியின்றி புகைப்படம் வெளியிட்டால் சிறை தண்டனை - சென்னை காவல்துறை எச்சரிக்கை!

கோப்பு புகைப்படம்

Follow Us On

சென்னை காவல்துறை: அனுமதியின்றி தனி நபரின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது கணிக்க முடியாத அளவில் உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்நாப்சாட், டெலிகிராம் என ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட நிலையில் இவற்றில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கணக்கு தொடங்கி உபயோகித்து வருகின்றனர். அதேசமயம் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளும் உள்ளதால் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட பலவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

Also Read: IPL 2025: ஜாம்பவானை குறிவைத்து தூக்கிய லக்னோ.. வழிகாட்டியாக களமிறங்கும் ஜாகீர் கான்..!

இதனைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலமாக சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவருடைய புகைப்படம் வெளியிட்டால் கூட அதனை பல வகையாக சித்தரித்து மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், முதியோர்களை குறிவைத்து இந்த சைபர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.  மேலும் போலியாக ஐடி உருவாக்கி நண்பர்கள் வட்டத்தில் பணம் கேட்பது, ஏதேனும் லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்யும்போது நமது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடுவது, ஆபாச உரையாடல் என பல வகையான குற்றங்களும் நடந்து வருகின்றன. இந்தக் குற்ற சம்பவங்களை குறைக்க மத்திய மாநில அரசுகள் சார்பிலும் சரி காவல்துறை சார்பிலும் சரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் இந்த அறிவிப்பை சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் ஆன்லைனில் தனியுரிமைகளை மதிக்கவும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 இ படி தனிநபரின் படங்களை அனுமதி இன்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் என்ன தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories
Chennai Murder: மூளையை வறுத்து சாப்பிட்ட சைக்கோ கொலையாளி.. பெண் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் வாக்குமூலம்.. கலங்கிய போலீஸ்!
TN Goverment: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Weather Alert: சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
Armstrong Murder Case : ”ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு”.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version