5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rain: இன்று வடக்கு.. நாளை தெற்கு .. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை!

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மூன்று தினங்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Rain: இன்று வடக்கு.. நாளை தெற்கு .. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை!
மழை
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Dec 2024 13:06 PM

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தென்கிழக்கு வங்கக்கடலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு – வட மேற்கு திசையில் இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மூன்று தினங்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Also Read: Tiruvannamalai: தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.. முழு விபரம்!

குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இரவு வரை விட்டு விட்டு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ள தகவலின்படி, “தென் தமிழகம்  இன்று முதல் நாளை வரை உஷார் நிலையில் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இன்று நல்ல நாள்

மேலும் சென்னையில்  காற்றழுத்த தாழ்வு நிலை மாலை வரை நீடிக்கும், பின்னர் மழை குறையும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  அரபிக்கடலுக்கு நகரும் என்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். சுற்றுலா தலமான குற்றாலம், கொடைக்கானல் பகுதிகளில் கனமழை பெய்யும். மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read: Rain Alert: தமிழகத்தில் மழை தொடரும்.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!

அதேசமயம் டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான உள் மாவட்டங்கள், கோவையைச் சுற்றியுள்ள கொங்கு மண்டலம், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இது ஒரு நல்ல நாள்” எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனுடைய சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் ஆறாவது முறையாக கடலூர் கரையோர பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தமிழகத்தை பொறுத்தவரை மழையின் தேவை அதிகமாக உள்ளது. ஒருவேளை மலை அதிகமாக பெய்தால் அதனை சமாளிக்கக்கூடிய தைரியம் அரசுக்கு இருப்பதாகவும் மக்கள் மழையை கண்டு அச்சம் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்

Latest News