5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கனமழை.. பள்ளிகள் விடுமுறை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவுவெடுப்பார்கள் – அமைச்சர் விளக்கம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பகுதியிலும் மழை அதிகமாக பெய்யும்போது கேட்கப்படும் அதிக கேள்வி என்னவென்று பார்த்தால், “இன்னைக்கு பள்ளி இருக்குமா, இல்லையா? , பள்ளிக்கல்வித்துறை சார்ந்து ஏதேனும் அறிக்கை வந்ததா?” ஆகியவை கேட்பது வழக்கமாக உள்ளது.

கனமழை.. பள்ளிகள் விடுமுறை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவுவெடுப்பார்கள் – அமைச்சர் விளக்கம்
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Oct 2024 13:01 PM

கோவையில் இன்று 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பகுதியிலும் மழை அதிகமாக பெய்யும்போது கேட்கப்படும் அதிக கேள்வி என்னவென்று பார்த்தால், “இன்னைக்கு பள்ளி இருக்குமா, இல்லையா? , பள்ளிக்கல்வித்துறை சார்ந்து ஏதேனும் அறிக்கை வந்ததா?” ஆகியவை கேட்பது வழக்கமாக உள்ளது. இதற்கெல்லாம் தெளிவான பதில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Also Read: Public Exams: 10,11, 12ம் வகுப்பு மாணவர்களே.. வெளியானது பொதுத்தேர்வு அட்டவணை!

மழை எந்த மாவட்டத்தில் அதிகமாக பெய்தாலும் சரி, அது அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தான் விடுமுறை தொடர்பாக முடிவு செய்வார். அவர் தான் பேரிடர் மேலாண்மைத்துறையுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தான் அதுதொடர்பான தகவல்களை எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் எந்த மாவட்டங்களில் மழை கணிப்பு தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை வருகிறதோ, அதுதொடர்பாக ஆட்சியர்கள் தான் முடிவெடுப்பார்கள். ஆகவே மாணவ செல்வங்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரும்  கவலைப்பட வேண்டாம். உரிய நேரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முடிவெடுப்பார்கள். முன்கூட்டியே அதற்கான தகவல்களை அவர்கள் தெரிவிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பருவமழை தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் பள்ளி மேல் கூரைகளில் மேல் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க பழுதானங்களில் உள்ள கட்டிடங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் உள்ள சுற்றுச்சூழல் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். வகுப்பறை மற்றும் கழிப்பறைகள் லாபத்தான முறையில் இருந்தால் பூட்டி வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான முறையில் உள்ள மின் கம்பிகளை மின்வாரியத்தில் துணையுடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை இடிப்பதுடன் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி குளங்களில் மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!

சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததால் மாணவ, மாணவியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நள்ளிரவு முதல் காலை வரை கனமழை பெய்த நிலையில் கல்வி நிறுவனங்கள் விடுமுறை விடப்படுமா என எதிர்பார்த்து காத்திருந்தனர். பலர் வீடுகளிலும் செய்தி சேனல்கள், பள்ளி வாட்ஸ்அப் குழுக்கள் என விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாத என காத்திருந்தனர். ஆனால் காலையில் மழை குறைந்ததால் விடுமுறை விடப்படவில்லை. இதனிடையே வானிலை பற்றிய முன்னறிவிப்பு, நிகழ்வு நேர தகவல் மற்றும் கள நிலவரத்தை அறிய வாட்ஸ் அப் குழுவில் சேருமாறு சென்னை காவல்துறை இணை ஆணையர் விஜயகுமார் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்து அழைப்பு விடுத்துள்ளார். அதில் 99947 – 9008 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News