100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – பதறிய மக்கள்.. மின்வாரியம் கொடுத்த விளக்கம்!
கடந்தாண்டு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நடப்பாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்ததால் மின்கட்டணம் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்ததாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டினர். இந்த மின் கட்டண உயர்வாள் வீடுகளுக்கான 100 என்று மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனவும் தகவல்கள் உலா வந்த நிலையில் அதில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு: தமிழக அரசின் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வீடுகளுக்கான 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்திகளை நம்ப வேண்டாம். எந்த தகவலாக இருந்தாலும் மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இப்படியான நிலையில் கடந்தாண்டு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நடப்பாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்ததால் மின்கட்டணம் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்ததாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டினர். இந்த மின் கட்டண உயர்வாள் வீடுகளுக்கான 100 என்று மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனவும் தகவல்கள் உலா வந்த நிலையில் அதில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2.34 கோடி வீடுகளுக்கும் மின்வாரியம் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை நம்ப வேண்டாம்! எங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களை பார்க்கவும்.!
The information circulating on social media is incorrect. For accurate updates, please visit our official website.#TANGEDCO | #TNEB pic.twitter.com/RwqwoKuYbR
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) September 26, 2024
வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்று முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற நிலையிலும் இந்த இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் அதிமுக ஆட்சியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் பணி அமல் செய்யப்பட்டது. அதனை தற்போது தமிழக அரசு மாதம் ஒருமுறை கணக்கீடு செய்யும் முறையாக மாற்ற உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
Also Read: Today Panchangam September 27 2024: இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் நல்ல நேரம் ராகு கால விவரங்கள்..
மேலும் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் ஒரு இணைப்பில் மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மின்சார வாரியம் திட்டவட்டமாக மறுத்தது. அதே சமயம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் நுகர்வோர்களை கண்டறிந்து அவற்றை ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு விதிமுறைகளை எதிராக பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை உரிய மின் கட்டணத்திற்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் மின்சார வாரியம் விளக்கம் கொடுத்திருந்தது.
Also Read: Srilanka: 24 மணி நேரத்தில் விசா.. இனி இலங்கைக்கு ஈஸியா செல்லலாம்!
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகள் மற்றும் வணிக இடங்களில் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி அமைக்கும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29, 217 மீட்டர்களும், கோவை வட்டத்தில் 6,616 மீட்டர்களும் பழுதாகி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழுதாகியுள்ள மின் மீட்டர்களை உடனடியாக மாற்றி மின் கட்டண இழப்பை தவிர்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவர் தமிழக அரசில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் இந்த இரு துறைகளும் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே செந்தில் பாலாஜிக்கு அவர் வகித்து வந்த துறைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கும் போது மின்சாரத் துறையில் புதிய அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.