TNPSC Group 4 result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது தெரியுமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Tamil News | TNPSC Group 4 result will be released next month officially announced | TV9 Tamil

TNPSC Group 4 result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது தெரியுமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published: 

03 Sep 2024 20:21 PM

குரூப் 4 வகையின் கீழ் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 6,244 காலிப்பணியிடங்களுக்கு  தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை சுமார் 15 லட்சத்துக்கும்  மேற்பட்ட விண்ணப்பத்தாரர்கள் எழுதினர். குறிப்பாக சென்னையில் மட்டும் 1.33 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்.

TNPSC Group 4 result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Follow Us On

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்:  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என பல வகைகளில் நடைபெறும் இந்த தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஏற்ப வெளியிடப்படும். இதனிடையே கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்கThe Greatest of All Time: “கரெக்டா இருந்துக்கோங்க” – ரசிகர்களுக்கு விஜய்யிடம் இருந்து வந்த உத்தரவு!

குரூப் 4 வகையின் கீழ் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 6,244 காலிப்பணியிடங்களுக்கு  தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை சுமார் 15 லட்சத்துக்கும்  மேற்பட்ட விண்ணப்பத்தாரர்கள் எழுதினர். குறிப்பாக சென்னையில் மட்டும் 1.33 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்.

 

Also ReadSpecial Trains: அப்படிப்போடு.. தீபாவளி வரை வாராந்திர சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடக்கம்!

இந்நிலையில்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடும் எனவும் அது குறித்த தகவல்களை tnpsc யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வில் கட் ஆப் மதிப்பெண் நடப்பாண்டு குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி கடந்த முறையை விட கட் ஆஃப் மதிப்பெண் 2 குறையும் எனவும் சொல்லப்படுகிறது. உரிய கட் ஆப் மதிப்பெண் கொண்டவர்களுக்கு ஆவணங்கள் சரிபார்த்த பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version