TNSTC: பைக், டிவி, ஃப்ரிட்ஜ்.. அரசு பேருந்தில் பயணித்தால் பம்பர் பரிசு அறிவிப்பு!

SETC BUS: அரசு பேருந்துகளின் தேவையானது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பண்டிகை நாட்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மேலும் பேருந்துகளின் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட சாதாரண, ஏசி பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

TNSTC: பைக், டிவி, ஃப்ரிட்ஜ்.. அரசு பேருந்தில் பயணித்தால் பம்பர் பரிசு அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Published: 

12 Nov 2024 18:04 PM

அரசு பேருந்து: அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை  TNSTC இணையதளம் மற்றும் மொபைல் செயலி வழியாக தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக எல்இடி டிவியும், மூன்றாவது பரிசாக குளிர்சாதன பெட்டியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக தொலைதூரம் செல்லும் எஸ்சிடிசி பேருந்துகளில் சிறப்பு நாட்களைத் தவிர்த்து சாதாரண நாட்களில் ஒரு இடத்தில் இருந்து பயணம் செய்யவும், மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வரவும் ஒரே பரிவர்த்தனையில் முன்பதிவு செய்யும்போது பயணத்திற்கான அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் டிக்கெட் முன்பதிவு ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் இருந்தால் 6வது முறை முன்பதிவு செய்யும்போது தள்ளுபடி ஆனது வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் ஆகியவை இரு வழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

Also Read: Kodaikkanal: கொடைக்கானலில் இந்த வாகனங்கள் வர திடீர் தடை.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேருந்து, ரயில் மற்றும் விமானம் ஆகியவை மிக முக்கிய போக்குவரத்து சாதனமாக திகழ்கிறது. விமானத்தில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வசதி நடைமுறையில் இருந்து வந்தது. இதன் காரணமாக எந்த ஊருக்குச் செல்லும் ரயில் என்றாலும் அதில் அனைத்து நாட்களும் டிக்கெட் காலி ஆகிவிடுகிறது.

பொதுமக்களின் தொடர் புகார்களை கருத்தில் கொண்டு இந்த 120 நாட்கள் என்பது தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பேருந்து போக்குவரத்தை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் நிர்ணயித்து இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை காட்டிலும் இரண்டு மடங்கு கட்டணம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் பலரும் சமீப காலமாக அரசு பேருந்துகளை நாடி வருகின்றனர்.

Also Read: Crime: சென்னை தி.நகரில் துணிகர சம்பவம்.. நகைகளை திருடிய பெண்!

இதனால் அரசு பேருந்துகளின் தேவையானது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பண்டிகை நாட்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மேலும் பேருந்துகளின் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட சாதாரண, ஏசி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

முன்பதிவில் சாதனை 

இப்படியான கடந்த அக்டோபர் 31ம் தேதி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 10,784 சிறப்பு பேருந்துகள் சென்னை,கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு சென்ற லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் 10,846 சிறப்பு பேருந்துகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு பேருந்துகளில் நவம்பர் 3 ஆம் தேதி பயணம் செய்ய 75 ஆயிரத்திற்கு அதிகமான பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இதன்மூலம் இதுவரை இல்லாத வகையில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ததில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பயணிகள் கடைசி நேர  கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு tnstc மற்றும் செயலி வழியாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்