5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: தொடர் கனமழை.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மழை தொடர்வதால்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

School Leave: தொடர் கனமழை.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
மழை (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Oct 2024 07:52 AM

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மழை தொடர்வதால்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவிட்டுள்ளார்.  அதேபோல, நாமக்கல் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால்  பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, கடந்த வாரம் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து கரையைக் கடந்ததால், மழை பெய்வதும் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில், வங்கக் கடலில் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக, வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக கூறப்படுகிறது. அதன்பின், அது மேலும் வலுப்பெற்று 23ஆம் தேதி புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

நாளை உருவாகிறது டானா புயல்

இந்த டானா புயல் வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் அல்லது மியான்மர் பகுதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மேலும், மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்களுககு கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

நாளையும், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Latest News