School Leave: தொடர் கனமழை.. ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!
பள்ளிகளுக்கு விடுமுறை : மழை பெய்து வருவதால் ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேகவெடிப்பு காரணமாக நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக வீடுகள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றையே தினமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றும் மழை பெய்து வருவதால் ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் தொடர் கனமழை
தமிழ்நாட்டில் அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது. அதற்கு முன்னதாக 14ஆம் தேதியே சென்னையில் கனமழை பெய்தது. அதற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அதேநேரத்தில் காற்றின் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் அவ்வப்போது கனமழை பெய்தது.
ஆனால், மாநிலம் முழுவதும் இதுவரை அடைமழை பெய்யவில்லை. அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பற்றாக்குறை மழையே நிலவி வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக மத்திய மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
முதலில் நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் நெற்பயிற்கள் பாதிக்கப்பட்டன. இப்போது கடந்த 2 தினங்களாக ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Also Read : சென்னையில் 28 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா? நோட் பண்ணுங்க!
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மிக மிக பலத்த மழை பெய்தது. அங்கு திடீரென ஏறபட்ட அடர்த்தியான மேகத்தின் விளைவாக, மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்தது. பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 34செ.மீ மழை பெய்துள்ளது.
இதுபோன்ற மழை பெய்வதும் ராமேஸ்வரத்தில் முதல்முறையாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் பல இடங்களிலும் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது. நேற்று முதல் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. அதாவது, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் சீரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால், இன்று ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
Also Read : நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. எங்கெங்கு?
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
இதற்கிடையில், வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளத. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வரும் 26,27ஆம் தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 27ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.