5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: .. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு?..இன்றைய முக்கியச் செய்திகள்..

Important Headlines | இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: .. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு?..இன்றைய முக்கியச் செய்திகள்..
செல்வப்பெருந்தகை
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 20 Sep 2024 07:09 AM

நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 2,000 நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக அறநிலையத் துறை குற்றம் சாட்டியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாடு :

  • சென்னை அருகே முன்னாள் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான 2 திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ரூ.60 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்திருப்பதால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  • சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 2,000 நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக அறநிலையத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகையை பதவி நீக்கம் செய்யக்கோரி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
  • திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்படுவதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Horoscope Today: செப்டம்பர் 20 2024 ராசிபலன்.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்.. யாருக்கு சாதகமாக உள்ளது?

  • தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
  • ஆம்பூர் அருகே திண்பண்டங்கள் வாங்கி தருவதாகக் கூறி, அழைத்துச் சென்று நண்வனின் 2 குழந்தைகளை கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரூ.14,000 கடனுக்கான இந்த கொலை அரங்கேறியது விசாரணையில் அம்பலம்.
  • கச்சத்தீவை தரவே முடியாது என்றும், இந்தியாவுக்கு எப்படி காஷ்மீரோ அப்படிதான் இலங்கைக்கு கச்சத்தீவு, கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயாராக இல்லை என்று அந்த நாட்டு அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பதாக கூறி, தூத்துக்குடி எஸ்.பியை ஏமாற்ற முயன்ற பெண் மற்றும் பாஜக இலக்கிய அணி பொறுப்பாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Today Panchangam September 20 2024: இன்று நல்ல காரியம் செய்யலாமா? பஞ்சாங்கம் சொல்வது என்ன?

  • புதுச்சேரியில் வலுகட்டாயமாக ஆதார் அட்டைகளை பெற்றுக்கொண்டு பாஜகவில் இணைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

வணிகம் :

  • இந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி கடந்த 8 மாதங்களில் இதுபோன்ற சுமார் 190 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Tirupati Laddu: ”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்” திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தொழில்நுட்பம் :

  • இன்ஸ்டாகிராம், ஃபேஸ்பும் மற்றும் வாட்ஸ் அப்பில் அழகை மேம்படுத்திக் காட்டும் Filter வசதிகள் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நீங்கம் செய்யப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Latest News