Today’s Top News Headlines: நாடு முதல் உலகம் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் இதோ!
இன்றைய தலைப்புச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு:
- கடலூரில் அதிமுக பிரமுகரை கொலை செய்தவர்களை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
- அமெரிக்காவில் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதலமைச்சர் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாடு நகரப்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் கட்டாயம் என அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதார் எண் பெரும்வரை குடும்ப அட்டை, வாக்களார் அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா:
- பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் முதன்முதலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி. பிரதமரின் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை பிரம்மாண்ட திரைகளில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பார்த்தனர்.
- நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் தாயுடன் இணைந்தோ, அவர்களின் பெயரிலோ மரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியல் வலியுறுத்தியுள்ளார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான நாட்டு மக்களுக்கு நன்றி கூறினார் பிரதமர் மோடி. அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசியுள்ளார்.
- 26 மாதம் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், ஓய்வு பெற்றார் ராணுவ தளமை தளபதி மனோஜ் பாண்டே. டெல்லியின் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
- இந்தியா ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக பதவியேற்றார் உபேந்திர துவிவேதி.
- மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதையொட்டி புதிய சட்டங்கள் நாடு முழுவதும் சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயிவியல், நீதித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
உலகம்:
- ஈரான் அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குளை பெற தவறியதால் ஜூலை 5ஆம் தேதி மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரான்சில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களித்தார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான்.
விளையாட்டு:
- டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை தொடர்பு கொண்டு தொலைபேசிய வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் உள்ளிட்டவர்களை பாராட்டினார்.
- விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஜடேஜா. டி20 உலகப்கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாகவும், ரசிர்களின் ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.