Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. நாடு முழுவதும் நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்: இன்று முதல் விமான பயணிகளிடம் குரங்கு அம்மை சோதனை, பாகிஸ்தான் - வங்க தேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி,கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து, இயக்குநர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை என பல துறை சார்ந்த தகவல்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இன்று முதல் விமான பயணிகளிடம் குரங்கு அம்மை சோதனை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியது திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பாகிஸ்தான் – வங்க தேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10.30 மணிக்கு ராவல்பிண்டியில் தொடங்குகிறது.
தமிழ்நாடு:
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிச்செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அதே பிரிவில் 2வது தனிச்செயலாளராக செயல்பட்டவர்.
- தமிழ்நாட்டில் இன்று முதல் விமான பயணிகளிடம் குரங்கு அம்மை சோதனை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியது திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
- கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
- தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி அதிமுக சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: ஸ்டாலினின் தனிச்செயலாளர்.. திமுக ஆட்சியில் அதிக கவனம் பெறும் உமாநாத் ஐஏஎஸ்!
இந்தியா:
- நிலச்சரிவு, கனமழையால் பாதிப்பை தொடர்ந்து கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
- குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் தானே பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் போராட்டம் நடந்தது.
- நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவிலான குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும என உச்ச நீதிமன்றம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் வலியுறுத்தி உள்ளது.
உலகம்:
- நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
- தென்கொரியாவில் ஜோங்தாரி புயல் நெருங்கியதால் பல இடங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்ணான மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பிரபல இயக்குநர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை..
விளையாட்டு:
- பாகிஸ்தான் – வங்க தேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10.30 மணிக்கு ராவல்பிண்டியில் தொடங்குகிறது.
- ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 27ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.