5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. நாடு முழுவதும் நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. நாடு முழுவதும் நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Aug 2024 06:48 AM

முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நாணையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தமிழ்நாடு:

  • ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
  • திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது என்றும் இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
  • முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடு மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நாணையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்று செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரு.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியா:

  • கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  • கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்ப்பு பேரணி நடத்திய அரசு பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்று மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
  • பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • இஸ்ரேல் மீது வரும் காலங்களில் தொலைதூர ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா எச்சரிச்சை விடுத்துள்ளது.
  • ஏமன் கடற்கரை அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஈரானில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து பிரேக் பிடிக்காததால் பள்ளத்தாக்கில் கவிழுந்தது. இந்த விபத்தில் 37 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விளையாட்டு:

  • பாகிஸ்தானை தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை வங்கதேச அணி பெற்றுள்ளது.
  • 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News