5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Jul 2024 08:47 AM

தமிழ்நாடு: 

  • சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு  வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் 2024 அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Also Read: சிறை டூ அபராதம்.. கள்ளச்சாராயம் விற்றால் இனி அவ்வளவுதான்… அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்

இந்தியா:

  • அசாம் வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 91 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வெள்ளத்தால் 2406 கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ள நிலையில், 2.95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • நாட்டின் 7 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் சுயேச்சையும், இரண்டு தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
  • பாஜக பின்னியிருந்த பயம், குழப்பம் என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன என்றும் மக்கள் நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
  • புனே பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் தாய் மனோரமா கேத்கர் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்த, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்:

  • தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்ட சில மணிநேரங்களில் வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
  • வட மத்திய ஆப்பிரக்க நாடான நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

விளையாட்டு:

  • இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியுள்ளார்.
  • ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 10 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Also Read: 15 ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நீடிக்குமா மழை?

 

Latest News