5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள்..

உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 03 Jul 2024 06:59 AM

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு ஊரக தொழில் மற்றும் புத்தொழில் காப்பு நிறுவனம் தொடக்கம், ஆண்டுதோறும் 100 மகளிர் தொழிலாளர்கள் அடையாளம் காண்பார்கள் என அமைச்சர் உதயநிதி பேச்சு
  • திமுக இரட்டை வேடமிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம், சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி விவாதிக்காமல், நாடாளுமன்றத்தில் நீட் விவாதிப்பதாக பேச்சு
  • தூத்துக்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை பணம் கொள்ளை, ஒரு மாதத்தில் திருப்பித்தருவதாக கடிதம் எழுதிய திருடன்
  • அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு
  • தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரதர தீர்வு வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
  • தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
  • தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் சாதி மோதல்கள் தலைவிரித்து ஆடுகிறது – வானதி ஸ்ரீனிவாசன்

Also Read: மேஷத்துக்கு நல்ல வருமானம்.. ரிஷபத்துக்கு மகிழ்ச்சி.. 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்..!

இந்தியா:

  • கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம், கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் ஒட்டிண்ணிகளாக உறிஞ்சுவதாக விமர்சனம்
  • உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பயங்கர விபத்து ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 114 பேர் உயிரிழப்பு.
  • பிரதமர் மோடியின் உரையின் போது எதிர்க்கட்சியினர் அமளி, மணிப்பூர் விவகாரம், நீட் குறித்து முழக்கம்
  • அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையை மீண்டும் அவையில் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம்
  • ராகுல் காந்தியை குழந்தை என மக்களவையில் விமர்சித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் அமளிக்கு மத்தியில் உரை
  • உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு அறிவிப்பு

உலகம்:

  • கென்யாவில் வரி உயர்வுக்கு எதிராக மக்கள போராட்டம் – 39 பேர் உயிரிழப்பு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்
  • இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் – பாகிஸ்தானுக்கு ஐநா கோரிக்கை
  • உக்ரைன் போரை டிரம்ப் ஒருநாளில் நிறுத்திவிடுவாரா? ரஷ்யாவின் ஐநா தூதர் பதிலடி
  • காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் – 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
  • நடு வானில் குளுங்கிய ஏர் யுரோப்பா விமானம் – 30 பயணிகள் படுகாயம்

விளையாட்டு:

  • விம்பிலள்டன் டென்னில் போட்டி: ஸ்வேரேவ் 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்
  • விம்பிலள்டன் டென்னில் போட்டி: 2வது சுற்றுக்கு  முன்னேறினார் ஜெகிசா பெகுலா
  • லங்கா பிரீமியர் லீக்:  நிசாங்கா பெர்ணாண்டோ அரைசதம் ஜாப்னா கிங்ஸ் 177 ரன்கள் குவுப்பு

Also Read: கிரெடிட் கார்டு பில் பேமெண்டில் மாற்றம்.. இனி இதுதான் நடைமுறை!