Today’s Top News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகள் இதோ! - Tamil News | | TV9 Tamil

Today’s Top News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகள் இதோ!

உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Todays Top News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகள் இதோ!

முக்கியச் செய்திகள்

Published: 

04 Jul 2024 06:58 AM

தமிழ்நாடு:

  • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இன்று முதல் 9 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • ஒரே நாளில் கோவை மற்றும் நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசும்பொருளாகி உள்ளது. கோவை மற்றும் நெல்லை மேயர்கள் மீது தொடர்ச்சியாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்த நிலையில், ராஜினாமா செய்துள்ளனர்.
  • கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலந்துள்ளது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
  • 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் நேற்று 2 ஆம் கட்டமாக சந்தித்து உதவித்தொகை வழங்கினார்.
  • நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளத என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்தியா:

  • பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாராத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணி பெண்கள் தொற்றுநோய் பரிசோதனை மற்றும் கரு வளர்ச்சி கண்காணிப்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
  • நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஒரு நாள் மணிப்பூர் உங்களை நிராகரிக்கும் என எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.
  • அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவை தலைவர் ஜகதிப் தங்கர். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம், பிரதமர் மோடியின் பதில் உரைக்கு மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகம்:

  • பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால், மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
  • உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பயங்கர விபத்து ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசுக்கு அதிபர் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சி.என்.என் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய காசாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பாலஸ்தீனர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டு:

  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
  • உலகக்கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி2 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், டி2 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!