Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. ஆம்ஸ்ட்ராங் கொலை முதல் பிரிட்டன் தேர்தல் வரை! - Tamil News | | TV9 Tamil

Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. ஆம்ஸ்ட்ராங் கொலை முதல் பிரிட்டன் தேர்தல் வரை!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Todays Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. ஆம்ஸ்ட்ராங் கொலை முதல் பிரிட்டன் தேர்தல் வரை!

முக்கியச் செய்திகள்

Updated On: 

06 Jul 2024 07:07 AM

தமிழ்நாடு:

  • பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 பேர் கொண்ட சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் இருந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று கண்ணீர் விட்டு கதறிய இயக்குநர் ரஞ்சித். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை அருகே ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து கொலையாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு மாயாவதி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
  • பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு முதலமைச்ச்ர ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சமூதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: நண்பன் ஆம்ஸ்ட்ராங் கொலை.. மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்!

இந்தியா:

  • பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக 14 பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • தற்போது ஆட்சி அமைத்திருக்கும் மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிசசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
  • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
  • நடந்து முடிந்த நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  • தெலங்கானா மாநிலத்தின் எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸில் இணைந்தனர்.
  • அசாமில் வெள்ளத்தில் சிக்கி சுமார் 62 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக 29 மாவட்டங்களில் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம்:

  • பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் நியமித்தார்.
  • பிரிட்டன் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் ஸ்டார்போர்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • பிரிட்டன் தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் பிரதமர் பதவியையும் ரிஷி சுனக் இழந்துள்ளார்.

விளையாட்டு:

  • விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்பரி ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
  • விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் இத்தாலி வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார். கனடா வீராங்கனையை 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

Also Read: 6 மர்ம நபர்கள்.. சரமாரி வெட்டு.. சென்னையில் பகீர் கிளப்பிய ஆம்ஸ்ட்ராங் கொலை!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!