5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: முதலமைச்சரை சந்திக்கும் திருமாவளவன்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: முதலமைச்சரை சந்திக்கும் திருமாவளவன்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 29 Oct 2024 14:33 PM

முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை உங்களைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாடு :

  • வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
  • ஆட்சி அதிகாரம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியது பெரும் விவாதமாக மாறிய நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கிறார் திருமாவளவன்.
  • பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை – திருத்தணி இடையே மின்சார ரயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
  • அதிமுகவில் அனைவரையும் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் கொண்ட இந்த சிறப்பு சுற்றுலா ரெயிலில், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 21 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, “மதராஸ் மாநிலம்” என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் என்று தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
  • அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் அதனை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம். கூட்டணி ஆட்சி விளிம்புநிலை மக்களின் குரலாக இருக்கும். அதை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
  • செபடம்பர் 16 ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சென்னையில் முகப்பேர், செம்பியம் மற்றும் ராஜ கீழ்பாக்கம்  உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
  • வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் என்றும் வரும் பிப்ரவரிக்குள் அனைவரும் ஒன்றினைவது உறுதி என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கள் தெரிவித்துள்ளார்.
  • திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த தனியார் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். புகாரின் பேரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க: நான் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மது விலக்கை நீக்குவேன்.. பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

இந்தியா :

  • குஜராத்தில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
  • பீகாரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவரின் ஆண் உறுப்பை செவிலியர் அறுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று மருத்துவர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த நிலையில், தற்காப்புக்காக அறுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
  • அடுத்த 2 நாட்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க: அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?

உலகம்:

  • கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது
  • டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு:

  • ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி: இன்று இந்தியா மற்றும் தென்கொரியா அணி மோதல்
  • டைமண்ட் லீக் போட்டி இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பெற்றுள்ளார். கையில் எலும்பு முறிவுடன் விளையாடி பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News