Today’s Top News Headlines: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை.. அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய தலைப்புச் செய்திகள்: உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை ஒரு நிமிடத்தில் உங்கள் கண் முன்னே படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது இந்த தொகுப்பு. இதன் மூலம் உள்ளூரில் நடக்கும் நிகழ்வுகள் தொடங்கி உலக அரங்கில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் வரை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Todays Top News Headlines:  நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை.. அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்

Updated On: 

19 Nov 2024 16:01 PM

தமிழ்நாடு:

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது.
  • சாதிவாரி கணக்கெடுப்புடன் 10 ஆண்டுக்கான மக்கள் தொகையும் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
  • சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதிமுகவினர் இன்று போராட்டம்
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெறப்பட்ட 64 வேட்புமனுக்களில் 29 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வாபஸ் பெறாத்தால் விக்கரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்தும் என முதலமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
  • மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Also Read: வேலையில் இருக்கும்போதே சுருண்டு விழுந்த இளைஞர்.. மாரடைப்பால் உயிரிழப்பு.. ஷாக் வீடியோ!

இந்தியா:

  • மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓம் பிர்லாவை மோடியும், ராகுல் காந்தியும் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
  • நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தொடரில் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்ப்பு
  • பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு.. எய்மஸ் மருத்துவமனையில் அனுமதி
  • ஜூன் 23ஆம் தேதி 1,563 மாணவர்கள் எழுதிய நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30அம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாவும், 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
  • நாடாளுமன்றத்தில் நெருக்கடி கண்டித்து சபாநாயகர் ஓம்பிர்லா தீர்மானம். எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு

உலகம்:

  • அமெரிக்க அதிபர் தேர்தல் டிரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேர் விவாதம், நாட்டிற்கான தங்களது செயல்திட்டங்கள் குறித்து விளக்க உள்ளதாக தகவல்
  • நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் நர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடையும் நிலையில், ரூட்டே பதவியேற்பார்.
  • கென்யா நாடாளுமன்றத்தில் தீ வைத்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 22 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

  • டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்துடன் இன்று இந்தியா பலப்பரீட்சை
  • இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் போட்டி வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் படைத்துள்ளார்.

Also Read: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறு தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?