Today’s Top News Headlines: விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு.. பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. இன்றைய முக்கியச் செய்திகள்.. - Tamil News | | TV9 Tamil

Today’s Top News Headlines: விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு.. பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Todays Top News Headlines: விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு.. பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்

Updated On: 

10 Jul 2024 07:38 AM

தமிழ்நாடு:

  • விக்கிரவாண்டியில விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு. 276 வாக்குச்சாவடிகளையும் இணைய வழியில் கண்காணிப்பு.
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்றால் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். தாம்பரம், திருப்பூர், சேலம் மாவட்ட ஆணையர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
  • தமிழகத்தில் மேலும் 5 புதிய தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். வரும் 29 ஆம் தேதி இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு

Also Read: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம்… ஜெய்ஷா அறிவிப்பு

இந்தியா:

  • ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதை அடுத்து கண்காணிப்பு பணிகளில் ராணுவ வீரர்கள் தீவிரவாக ஈடுபட்டுள்ளனர்.
  • ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணம் அடைந்ததற்கு பழிக்கு பழி தீர்வு அல்ல என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
  • கர்நாடகாவில் 7,362 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் முதல்வர் சித்தராமையா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
  • பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் போது சாமி சிலை சரிந்து விழுந்து 9 பேர் படுகாயம்.

உலகம்:

  • ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை மீண்டும் கொண்டு வர அனைத்து வழிகளிலும் இந்தியா உதவ தயார் என அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  • 3 நாள் அரசு முறை பயணம்.. ஆஸ்திரியா பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி இன்று சந்திப்பு
  • ஏடன் வளைக்குடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
  • பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பு நாடுகளில் உறவை மேம்படுத்த மோடி செயல்பட்டதை தொடர்ந்து அதிபர் புதின் கவுரவம்

விளையாட்டு:

  • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் ஆடும் லெவன் அறிவிப்பு
  • தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? 3வது டி20 போட்டியில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
  • ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்

Also Read: இந்த நாள் யாருக்கு சாதகம்? 12 ராசிகளுக்கான இன்றைய பலன்..

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!