Today’s Top News Headlines: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: இன்றைய நாளில் உங்களைச் சுற்றி நடந்த மிக முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நாம் ஒரே தொகுப்பாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் நீங்கள் தவற விட்டிருந்த முக்கியமான செய்திகளை அறிந்து கொள்ளலாம். உள்ளூர் முதல் உலகம் வரையிலான நிகழ்வுகள் இந்த தொகுப்பில் செய்திகளாக இடம் பெற்றுள்ளது.
முக்கியச் செய்திகள்:
தமிழ்நாடு :
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கான விடுதியை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரூ.125 கோடி மோசடி வழக்கில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை சென்னைக்கு அழைத்து வந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா :
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு, சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியா, இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டியும் தர்மசாலாவில் இருந்து குவாலியருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிஙக் : Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? இதுதான் காரணமா?
வணிகம் :
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சிஎன்ஜி கிலோ ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.