5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: இன்று பதவி விலகுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: திமுக பவள விழா சென்னை நந்தனத்தில் இன்று நடக்க உள்ளது. இந்த விழாவில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கலைஞரின் வாழ்த்துரை உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களின் 3 கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today’s Top News Headlines: இன்று பதவி விலகுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
அரவிந்த் கெஜ்ரிவால்
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Nov 2024 21:56 PM

முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை உங்களைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாடு :

  • சென்னை நந்தனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பவள விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கலைஞரின் வாழ்த்துரை வழங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதுரை மற்றும் திருவள்ளூரில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது.
  • தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரொக்க பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
  • சமயபுரத்தில் கடந்த 13வ் ஆம் தேதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனங்களை வைத்து அரசு பேருந்தை வழிமறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பெளர்ணமியை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து 300, கோயம்பேட்டில் இருந்து 15 மற்றும் மாதவாரத்தில் இருந்து 30 மற்றும் பிற இடங்களில் இருந்து சுமர் 175 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க : Horoscope Today: செப்டம்பர் 17 2024 ராசிபலன்.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்..

இந்தியா :

  • கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களின் 3 கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவதுதுறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
  • டெல்லியில் முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று நடைபெற உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுக மகன மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் மீது மும்பை நடிகை பரபரப்பு பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் புகாரை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிங்க : Today Panchangam September 17 2024: பஞ்சாங்கம் சொல்லும் நல்ல நேரம், ராகு கால விவரங்கள்..!

சினிமா :

  • லால் சலாம் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும், இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் திரைப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Coconut Oil Benefits: முகம் முதல் இதயம் வரை.. பராமரிப்பை அள்ளி தரும் தேங்காய் எண்ணெய்..!

உலகம் :

  • உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ரோஸி வயது 33 என்ற பூணை உயிரிழந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக தனது 33வது வயதில் உயிரிழந்துள்ளது. மனித வாழ்நாளுடன் ஒப்பிட்டால் ரோஸிக்கு 152 வயது ஆகும்.

Latest News