5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 18 Sep 2024 07:18 AM

நேற்று காலை முதல் தற்போது வரை உங்களைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • சென்னை பூந்தமல்லியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
  • கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாது நிலை உள்ளது என்றும் கோட்டை இருந்தாலும் புல்லை வெட்ட மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் பவள விழா கொண்டாட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
  • செபடம்பர் 18ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஆயிரம் விளக்கு, மேடவாக்கம், திருவொற்றியூர், அம்பத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் பூ மாலை வைத்து, பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.
  • நம்முடைய இலக்கு 2026ஆம் ஆண்டும் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல். இப்படி ஒரு வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை என்பதை வரலாறு சொல்ல வேண்டும் என்று திமுக பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
  • தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (17.09.2024 மற்றும் 18.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: “கீரிம் பண்ணுக்கு எவ்வளவு வரி என கேட்க முடியல” திமுக பவள விழாவில் கலாய்த்த ஸ்டாலின்!

இந்தியா:

  • ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்.
  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்த உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்.ஏ-க்கள் கூட்டத்தில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மும்பையில் 11 நாள் கொண்டாட்டத்திற்கு பின் சுமார் 7500 விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
  • பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம்:

  • லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் இதுவரை 77 பேர் காணாமல் போகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 277 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெருவில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்ய மக்களுக்கு அதிபர் புதின் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டு:

  • ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024ன் ஹாக்கி இறுதிப்போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, சொந்த மண்ணில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 5வது முறையாக கோப்பை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் ஆடவர் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

Latest News