Today’s Top News Headlines: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். திமுகவின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளருமான க.சுந்தரம் உடல்நலக் குறைவால் காலமானார். லெபனானில் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது
தமிழ்நாடு :
- திமுகவின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளருமான க.சுந்தரம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக் குறைவால் உயிரிழந்த அமைச்சரின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படுவது அதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி
- பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பதில் அளித்துள்ளார்.
- தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், துணை முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு செய்யப்பட்ட ஆசிரியரின் உடலை கண்டு மாணவிகள் கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. - தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா என்பவர், மதம் மாற சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில், மாணவியின் தற்கொலைக்கு மத மாற்ற கட்டாயம் காரணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
- சென்னையின் பிரபல ரவுடியான பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த நிலையில் தற்காப்புக்காக காவல்துறை அவரை சுட்டதில் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
- சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, ரெட்ஹில்ஸ், அத்திப்பட்டு புது நகர் மற்றும் டிஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் சுந்தரம் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
இந்தியா :
- ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த சுமார் 18,626 பக்கங்களை கொண்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் :
- லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது
- 27 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அடுத்த அலை அல்லது புதிய அலை உருவாக்ககூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!
விளையாட்டு :
- இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செப்டம்பர் 19) தொடங்குகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளும் கடந்த ஒரு வார பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024ன் ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனா மற்றும் இந்திய ஹாக்கி அணிகள் மோதின. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, சொந்த மண்ணில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 5வது முறையாக கோப்பை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றது.