Today’s Top News Headlines: இலங்கையின் அடுத்த அதிபர் ஆகிறார் அனுரகுமார திஸாநாயக்க? .. இன்றைய முக்கியச் செய்திகள்..
Important News | இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒரு தமிழன் பிரதமராக பதவி ஏற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியின் முதலமைச்சராக அதிஷி மெர்லினா பதவியேற்றார்.
தமிழ்நாடு :
- ஒரு தமிழன் பிரதமராக பதவி ஏற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் அவர் இவ்வாரு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும். ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் நீக்கப்பட்டது இறுதி முடிவு என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்பு மாவட்ட கண்காணிப்பாளரிடம் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராக்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவர் என்று கூறப்படும் ரவுடி அப்பு என்பவர் கைதாகி உள்ளார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் எவ்வளவு ஆபத்தானது என்றும் இந்தியாவுக்கு அது தேவையில்லை பொதுக் குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : Horoscope Today : செப்டம்பர் 22,2024.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்..
இந்தியா :
- இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார்.
- டெல்லியின் முதலமைச்சராக அதிஷி மெர்லினா பதவியேற்றார். இதன் மூலம் டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.
- திருப்பதி லட்டின் புனிதம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி. கோயிலில் பரிகாரம் செய்வது குறித்து ஜீயர்கள், சனாதன பண்டிதர்களுடன் ஆலோசை நடத்துகிறார்.
- ராகுல் காந்திக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரம்ஜான் மற்றும் மொஹரம் பண்டிகைகளை முன்னிட்டு 2 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Today Panchangam September 22 2024 : இன்று நல்ல காரியம் செய்யலாமா? பஞ்சாங்கம் சொல்வது என்ன?
உலகம் :
- மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்கா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அமெரிக்காவில் சீக்கியர்கள் மற்றும் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசியதாக எழுந்த புகாருக்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பாஜகவினர் பொய்யைப் பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
- வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இமாலய இலக்கு என்பதால் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
- நியூயார்க் மாநகரில் இந்திய வம்சாவளிகளை இன்று சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இதையும் படிங்க : Banana Benefits: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? பல நோய்கள் நீங்கும்!
வணிகம் :
- சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.88.50-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.