Today’s Top News Headlines: கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி.. இன்றைய முக்கியச் செய்திகள்.. - Tamil News | todays top news headlines 26 july 2024 know important happenings around you | TV9 Tamil

Today’s Top News Headlines: கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி.. இன்றைய முக்கியச் செய்திகள்..

Updated On: 

26 Jul 2024 07:22 AM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Todays Top News Headlines: கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்

Follow Us On

தமிழ்நாடு :

  • திருப்பூரை சேர்ந்த ஓட்டுநர் மலையப்பன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
  • உள்ளாட்சி தேர்தலுக்கு அனைவரும் தயராக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்
  • டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன், அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு. காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசியதாக தகவல்.
  • தற்போது காலியாக உள்ள கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர்கள் பதவிக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமாரும், திருநெல்வேலி மேயராக பி.எம்.சரவணனும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
  • சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெறும் நிலையில், சென்னை மேடவாக்கம் நெஞ்சாலையில் மேடவாக்கம் கூட் ரோடு முதல் வானுவம்பேட்டை வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
  • கர்நாடகா பகுதிகளில் மீண்டும் பெய்யும் கனமழை. காவிரியில் இருந்து நீர் வரத்து 86 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேலும் படிக்க: கோவை, நெல்லை-க்கு மேயர் தேர்தல் நடத்த அனுமதி.. மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

இந்தியா:

  • கார்கில் போரின் 25 வது வெற்றி தினம். வீரர்கள் நினைவிடத்தில் சென்று வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி. இதற்காக இன்று கஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
  • பட்ஜெட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்
  • தொடர் கனமழையால் மும்பை மற்றும் பூனேவை சூழ்ந்த வெள்ளம், இதுவரை 6 பேர் உயிரிழப்பு

உலகம் :

  • சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம்
  • கொலம்பியாவில் கால்பந்து மைதானத்தில் ட்ரோன் தாக்குதல், சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான இப்ஸோ உடன் இணைந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு 2% அதிகமாக ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு :

  • பாரிஸில் இன்று தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா. கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள்
  • பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வில்வித்தையில் இந்திய வீரர் வீராங்கணைகள் அசத்தல். நேரடியாக காலிறுதி போட்டிக்கு தகுதி

மேலும் படிக்க: தூக்கத்தை கெடுக்கும் சோஷியல் மீடியா.. ஷாக் ரிப்போர்ட் என்ன தெரியுமா?

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version