5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: முக்கியச் செய்திகள் இன்று.. உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

ஒரு நாளில் உங்களை சுற்றி பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அதனை ஒரே இடத்தில் காண்பது என்பது அரிதானது. அதற்காகத்தான் இன்றைய முக்கிய நிகழ்வுகளை ஒரே தொகுப்பில் செய்திகளாக காணும் பொருட்டு இந்த தலைப்புச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Today’s Top News Headlines: முக்கியச் செய்திகள் இன்று.. உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 19 Nov 2024 15:57 PM

தமிழ்நாடு:

  • தமிழகத்திற்கு ஜூலை மாதம் தர வேண்டிய 34.1 டி.எம்.சி தண்ணீரை தர கர்நாடகா அரசுக்கு வலுயுறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
  • தமிழ்நாட்டில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 75,000 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் அதிமுக மனு, மாநில காவல் துறையின் விசாரணை நேர்மையாக இருக்காது என குற்றச்சாட்டு
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு மீது இன்று மீண்டும் விசாரணை. தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  கடிதம்

Also Read: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாலும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

இந்தியா:

  • வரலாற்றில் முதன் முறையாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இந்தியக் கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி
  • மக்களவை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு இந்தியக் கூட்டணி நாடாளுமன்ற கூட்டத்தில் முடிவு
  • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிபிஐ விசாரணை
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பதவியேற்றபோது, நாடாளுமன்றத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி, தமிழ் வாழ்க என முழக்கமிட்டனர்.
  • கேரள மாநில சட்டசபையில்  ஒருமனதாக கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், முதல் அட்டவணையில் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற அரசியல் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

உலகம்:

  • அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜூலையில் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல். ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
  • காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.
  • அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை இணையத்தில் கசியவிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை

விளையாட்டு:

  • டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
  • உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்

Also Read: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!

Latest News